உடனடி உணவுத் தயாரிப்பில் முத்திரை பதிக்கும் மைசூர் உணவுக் கழகம்
பெங்களூர்:
கர்நாடக மாநிலம் மைசூரில் இயங்கி வரும் மத்திய உணவு ஆராய்ச்சிக் கழகம் போஷாக்குடன் தனது பொன் விழா ஆண்டைக் கொண்டாடுகிறது.
கடந்த 50 வருடங்களாக இன்ஸ்டன்ட் உணவு தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது இந்தக் கழகம். கழக இயக்குநர் பிரகாஷ் இதுகுறித்துக் கூறுகையில்,50 வருடங்களுக்கு முன்பு இந்திய கிராமங்களில் வீங்கிய வயிறுடன் காணப்படும் சிறுவர்கள் அதிகம். ஊட்டச் சத்து இல்லாததால்தான் இப்படிப்பட்டகாட்சிகளை இந்தியா காண நேர்ந்தது.
குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் பால் பொருட்கள், பவுடர்கள் போன்றவை எருமைப் பாலிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. இதில் கொழுப்புஅதிகம். ஆனால் நாங்கள் அதே எருமைப் பாலில், குறைந்த கொழுப்பு சத்தியுடன் கூடிய பால் பொருட்களைத் தயாரிக்கிறோம்.
பாரம்பரிய முறையிலான உணவு தயாரிப்பில், நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உணவுப் பொருட்களைத் தயாரித்து, இந்தியா முழுவதிலும் உள்ளலட்சக்கணக்கான சிறுதொழிலதிபர்களுக்கு உதவுவதே எங்களது முக்கிய நோக்கம்.
குஜராத் மாநிலத்தில், தோசை தயாரிக்கும் இயந்திரத்தையும் அறிமுகப்படுத்தினோம். இதற்காக தயாரிக்கப்பட்ட இயந்திரத்தில் அரிசி மற்றும் இதரபொருட்களைப் போட்டால் போதும். மறுபக்கம் தோசைகள் வந்து கொட்டும்.
இதே போல் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை, வடை மற்றும் குஜராத் மாநிலத்தில் புகழ்பெற்ற டோக்லா வகை உணவுகளைஇன்ஸ்டன்டாகத் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் வீணாவதைக் குறைப்பது பற்றியும் ஆலோசித்து வருகிறோம். உதாரணமாகத் தென்னைமரத்தை எடுத்துக் கொண்டால் அதில் உள்ள எதுவும் வீணாவதில்லை. இதே போல் மாமரத்திலிருந்து கிடைக்கும் அனைத்தையும் உபயோகிக்கநடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் பிரகாஷ்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications