மீண்டும் வருகிறார் வி.பி.சிங் .. பின்தொடருமா 3 -வது அணி?
கல்கத்தா:
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.இதையடுத்து தேசிய அளவில் மூன்றாவது அணி உருவாகலாம் என்ற எதிர்பார்ப்புவலுத்துள்ளது.
மேலும், சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் பதவியிலிருந்து விடைபெற்றஜோதிபாசுவும், மூன்றாவது அணி அமைப்பது தொடர்பான பணிகளில் தீவிரமாகஈடுபட்டுள்ளார். இதனால், மூன்றாவது அணி நிச்சயம் உருவாகும் என்ற பேச்சுஅடிபடுகிறது.
ஜோதிபாசுவுடன் சனிக்கிழமை தொலைபேசியில் வி.பி.சிங் பேசுகையில், தான் தீவிரஅரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் இருவரும் பேசியதாகத் தெரிகிறது.
சிங் முடிவுக்கு ஜோதிபாசுவும் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில புதியமுதல்வராக புத்ததேவ் பாட்டசார்ஜி திங்கள்கிழமை பதவியேற்கிறார். இந்த நிகழ்ச்சிமுடிந்த பிறகு மூன்றாவது அணி குறித்து விரிவாகப் பேசுவதாகவும், சிங்கிடம் பாசுகூறியுள்ளார்.
முன்னதாக மற்றொரு முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் பாசுவின் முயற்சிகளுக்குவாழ்த்துத் தெரிவித்துள்ளார். கல்கத்தா வந்த அவர் ஜோதிபாசுவை அவரது இல்லத்தில்சந்தித்தபோது தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். பா.ஜ.க, காங்கிரஸ்கட்சிகளுக்கு மாற்றாக ஒரு அணி அமைய வேண்டியதன் அவசியத்தையும் அவர்பாசுவிடம் வலியுறுத்தினார்.
இன்னொரு பிரதமரான தேவெ கெளடவும் ஏற்கனவே ஜோதிபாசுவின் மூன்றாவதுஅணி முயற்சிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications