காங். தலைவர் பதவிக்கு இளங்கோவன் போட்டியிடுவாரா?
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன்கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாநில காங்கிரஸ் தலைவர்பதவிக்குப் போட்டியிடுவது குறித்து இன்னும் நான் முடிவு செய்யவில்லை. தற்போதுதமிழக காங்கிரஸ் நிர்வாகத்தில் தலித்கள் மற்றும் பிற சிறுபான்மைப் பிரிவினருக்குப்போதுமான பிரதிநிதித்துவம் தரவில்லை. விரைவில் அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம்அளிக்கப்படும்.
காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையிலான உறவு தொடர்ந்து நீடிக்கிறது.தேர்தலின்போதுதான் கூட்டணியில் மாற்றம் தேவையா என்பது குறித்து முடிவுசெய்யப்படும்.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கொடுக்கப்பட்டிருந்தாலும் கூடஅவரால் தேர்தலில் நிற்க முடியும். இந்த நிலையில் எதையுமே முடிவு செய்யக் கூடாது.பல வக்கீல்கள், ஜெயலலிதா தேர்தலில் நிற்க முடியும் என்றே கூறி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்கவும், சோனியா காந்தியை எதிர்க்கவும் சில சக்திகள்மறைமுக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த சக்திகளின் சார்பில் தான்ஜிதேந்திரா பிரசாத் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
ஜிதேந்திர பிரசாத்துக்கு காங்கிரஸார் யாரும் ஓட்டுப் போட மாட்டார்கள். அனைவரும்அவரது போட்டியை எதிர்க்கின்றனர் என்றார் இளங்கோவன்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications