ஜெ. திருந்த வேண்டும் என்கிறார் ஆற்காடு வீராசாமி
சென்னை:
ஜெயலலிதா தனது ஆணவத்தை விட்டுவிட்டுத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் கருணாநிதியை ஜெயிலில் அடைப்பேன் என்று ஜெயலலிதா பேசியதற்கு ஆட்சேபம் தெரிவித்து,தென்சென்னை திமுக சார்பில் மயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட ஆற்காடு வீராசாமி பேசியதாவது:
முதல்வர் கருணாநிதியை விமர்சித்தற்காக ஜெயலலிதா மீது ஒரு புறம் ஆத்திரம் இருந்தாலும், இதன் மூலம் அவர் அதிமுக தொண்டர்களிடையே எழுச்சியைஏற்படுத்தியதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
டான்சி நிலப் பேர ஊழல் வழக்கில் ஜெயலலிதா ஜாமீன் மனுத் தாக்கல் செய்தால் அதற்கு ஆட்சேபணை தெரிவிக்காதீர்கள் என்று அரசு வக்கீலுக்குமுதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதனால்தான் உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. இல்லாவிடில் இந்நேரம் ஜெயலலிதாஜெயலில் கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்.
ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் இரண்டு ஆண்டுகள், டான்சி நிலப்பேர ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டனைகிடைத்துள்ளது. 60 கோடி ரூபாய் சொத்து சேர்த்த ஜெயலலிதாவுக்கு எவ்வளவு தண்டனை கிடைக்கும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
லண்டனில் 248 கோடி ரூபாய்க்கு பிரமாண்டமான ஹோட்டல் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இதுபற்றி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், மலேசியா தவிர கேமரூன் தீவுகளிலும் 750 கோடிக்கு ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து இருக்கிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
ஜெயலலிதா 2001 ம் ஆண்டில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியுமா? என்பதே சந்தேகம். அவர் தேர்தலில் நிற்கவே முடியாது. ஜெயலலிதா தன்ஆணவத்தைக் கைவிட்டுவிட்டுத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆற்காடு வீராசாமி.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications