ஊழல் புகார்: மீண்டும் பிரச்சனையில் பங்காரப்பா
டெல்லி:
அளவுக்கு அதிகமாக சொத்து சேர்ந்தது தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா மீது சி.பி.ஐ. தாக்கல்செய்த குற்றப் பத்திரிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் முதல்வராக இருந்த பங்காரப்பா பெரும் ஊழல்களில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன.அரசு அலுவலகங்களுக்கு கம்ப்யூட்டர்கள் வாங்கியதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு செய்திருந்தார்.
இவர் மீது சி.பி.ஐ. வழக்குத் தொடர்ந்தது. விசாரணை நடத்தி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும்தாக்கல் செய்தது. ஆனால், இந்த குற்றப் பத்திரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இதை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனை நீதிபதி தாமஸ் தலைமையிலான உச்சநீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. நீதிபதி தாமஸ் கூறுகையில், பங்காரப்பா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்ட நிலையில் அதனை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது தவறு. இதில் நீதிமன்றம் தனது அதிகார வரம்பைமீறி செயல்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்த காலத்தில் ரூ. 7.78 அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளார் பங்காரப்பா. இது தவறானமுறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களா இல்லையா என்பதை விசாரித்திருக்க வேண்டும் என்றார்.
பங்காரப்பாவின் ஆட்சி காலத்தில் ஊழல் புகார்கள் பெருகியதால் அவரது பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தான் காவிரிப் பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. தன்னை அரசியல்ரீதியில் நிலை நிறுத்திக் கொள்ளகாவிரிப் பிரச்சனையை பங்காரப்பா பயன்படுத்தினார். இவரது ஆட்சியில் தான் லட்சக்கணக்கான தமிழர்கள்கர்நாடகத்தில் தாக்கப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications