புதிய நீதிக்கட்சி தலைவர் கல்லூரிக்குத் தடை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு அனுமதி பெற்ற பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தால்நடத்தப்படும் பல் மருத்துவக் கல்லூரிக்கு விதித்திருந்த தடை சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளை என்ற நிறுவனம் சென்னை முகப்பேரில் தாய் மூகாம்பிகை என்ற பெயரில் பல்மருத்துவக் கல்லூரி ஒன்றை நடத்தி வருகிறது.

இந்தக் கல்லூரி புதிய நீதிக்கட்சியின் தலைவர் சண்முகத்துக்கு சொந்தமானது. இதில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும்முதலாம் ஆண்டிற்கு 60 மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால் இக்கால்லூரியில் 40 மாணவர் சேர்க்கைக்குமட்டுமே அனுமதி உள்ளது என எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கூறியது.

இதன் காரணமாக அரசின் அனுமதி பெறாமல் 20 மாணவர்களை அதிகமாக சேர்த்து வருவதற்கு விளக்கம் கோரிகல்லூரி நிர்வாகத்திற்கு பல்கலைக் கழகத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு விரிவான விளக்கத்தைகல்லூரி நிர்வாகம் அளித்தது.

இந்த கல்வி ஆண்டு முதல் அரசின் அனுமதி பெற்ற பிறகுதான் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் எனஎம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் தாய் மூகாம்பிகை கல்லூரிக்கு கடிதம் அனுப்பி வைத்தது.

இதை தடை செய்து, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி கண்ணம்மாள் அறக்கட்டளையின்தலைவர் லலிதாலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜன் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் பிறப்பித்த தடை உத்தரவை ரத்துசெய்து தீர்ப்பளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+