தமிழக அரசியல் புயலில் சிக்கித் தவிக்கும் ராஜ்குமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் நெடுமாறனை தாக்கி பேசியதால் தூதுவர் குழுகாட்டிற்கு போவது கேள்விக் குறியாகி இருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் இந்த விஷயத்தில் மிகவும் அப்செட் ஆகியிருப்பதாக சொல்கிறார்கள். இது என்ன புதுகுழப்பம்? ராஜ்குமார் எவ்வளவுபெரிய மனிதர். 100 நாட்களுக்கும்மேலாக காட்டுக்குள் இருக்கிறார்.

இரு மாநிலங்களும் மீட்பதற்கு முயற்சிகள் எடுத்தக் கொண்டிருக்கிற நிலையில் த.மா.கா.வினர் ஏன் இப்படிகுழப்புகிறார்கள்? பிரச்சனையை அரசியலாக்கி ராஜ்குமாரின் வருகையை தாமதப்படுத்துவது ஜீரணிக்க முடியாததுஎன்று வருத்தப் பட்டாராம்.

இந்த பிரச்சனையை அரசியலுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டியது. இதை ஏன் இப்படி கையாளுகிறார்கள்என்கிற வருத்தத்தில் இருக்கிறாராம் ரஜினிகாந்த்.

ஏன் திடீரென பிரச்சனை? தொடர்வது பிரச்சனையின் பிண்ணனி:

தமிழக அரசியலில் சிக்கித் தவிக்கிறது வீரப்பன் விவகாரம். இந்த முறை கண்டிப்பாக ராஜ்குமாரை மீட்டுவருவோம் என்று உற்சாகமாக காட்டிற்கு கிளம்பத் தயாராக இருந்தனர் அரசு தூதர்கள்.

கடந்த 6-ம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டம் கூடியது. 7-ம் தேதி இரவு காட்டிற்கு கிளம்புவதற்கு தயாராகஇருந்தனர் நெடுமாறன், சுகுமாறன், பேராசிரியர் கல்யாணி ஆகியோர். அன்று சட்டமன்றத்தில் சட்டமன்றஎதிர்க்கட்சித் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கள் நெடுமாறனை கோபம் கொள்ள வைத்தது.

தேசத்துரோகி நெடுமாறன் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்தார் சோ.பாலகிருஷ்ணன். சட்டமன்றத்தில்சோ.பாலகிருஷ்ணன் பேசிய பேச்சுக்கள் வெளியே தெரிந்தது தான் தாமதம்.

சோ.பா.வையே காட்டுக்கு அனுப்பி ராஜ்குமாரை மீட்கச் சொல்லுங்கள் என்று உணர்ச்சி பூர்வமாக பேசி காட்டிற்குசெல்ல மாட்டேன் என்று ஒதுங்கிக் கொண்டார் நெடுமாறன். நக்கீரன் ஆசிரியர் கோபாலும் ஒதுங்கிக் கொண்டார்.

சோ.பா. மன்னிப்பு கேட்டால்தான் காட்டிற்கு செல்வது பற்றி யோசிக்க முடியும் என்று தெளிவாக கூறிவிட்டனர்தூதர்கள் தரப்பில். இந்த நிலையில் நெடுமாறனை சமாதானம் செய்ய பலர் முயன்று வருகின்றனர்.

சோ.பா. சட்டமன்றத்தில் பேசியது தவறு. நான் நேற்றும் சரி இன்றும் சரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் தான்.அதில் மாற்றமேயில்லை. நாளையும் விடுதலைப்புலிகள் ஆதரவாளன்தான்.

ஆனால் ராஜ்குமார் விவகாரத்தில் மனிதநேய அடிப்படையில் தான் செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம்.தேசத்துரோகி என்று சோ.பா. எப்படி விமர்சிக்க முடியும்? அதுவும் சட்டமன்றத்தில் என்று தன்னைசமாதானப்படுத்த வந்தவர்களிடம் சூடாகவே பேசினாராம் நெடுமாறன்.

சோ. பா.விடமும் நடுநிலையாளர்கள் சிலர் ஏன் பிரச்சனையை பெரிதாக்குகிறீர்கள். ராஜ்குமார் கடத்தப்பட்டு 100நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் காட்டில் இருந்து எப்பொழுது வருவார் என்று உலகமே எதிர்பார்த்திருக்கஇந்த நிலையில் உங்களால் குழப்பம் தேவையா என்று பேசப்பட்டதாம்.

சோ.பா. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டமன்றத்தில் பேசிக் கொள்ளலாம் என்று முடித்துக்கொண்டாராம். மேலும் ராஜ்குமார் காட்டுக்குள்ளிருப்பது எங்களுக்கும் வருத்தமான விஷயம்தான்.காட்டுக்குள்ளிருந்து அவர் உடனே விடுவிக்கப் படுவதைத்தான் நாங்களும் விரும்புகிறோம் என்று தனதுகருத்தையும் தெரிவித்தாராம்.

இந் நிலையில் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திர ராஜ்குமார் இருவரும் தமிழக தலைவர்களைசந்தித்து தூதர்களை காட்டிற்குச் செல்லச் சொல்லுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதும் வேதனையானது.

வியாழக்கிழமையன்று நெடுமாறனை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.சந்தித்த பின்பு நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், எனது நண்பர் பழ. நெடுமாறன் மீண்டும் காட்டுக்குள் சென்றுநடிகர் ராஜ்குமாரை மீட்டுவர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அவரும் காட்டுக்குள் செல்வது பற்றிபரிசீலிப்பதாகச் சொன்னார் என்றார்.

ராஜ்குமாரின் மகன்கள் நெடுமாறனை சந்தித்து பின்பு மூப்பனார், நக்கீரன் ஆசிரியர் கோபாலையும் சந்தித்துஎங்கள் தந்தையை எப்படியாவது மீட்டுத் தாருங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நடுவே வியாழக்கிழமையன்று சோ.பா. பேசிய பேச்சுக்கள் மேலும் நெடுமாறனை கோபம் கொள்ளச்செய்திருக்கிறது.

வியாழக்கிழமையன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய சோ. பாலகிருஷ்ணன், தேசவிரோத சக்தி என்று நான் நெடுமாறனை பற்றிச் சொன்னதற்காக அவர் புண்பட்டதாக கூறியிருக்கிறார்.

அவர் தேச விரோத சக்தி என்பதை என்னால் நிரூபிக்க முடியும். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 1974-ம்ஆண்டுக்கு பிறகு எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதற்கு முன்பு அவர் எனக்கு நல்ல நண்பர்தான்.

ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக அவர் நாடு முழுவதும் நிதிதிரட்டுவதற்காக அக்கறை எடுதுத்துக் கொண்டவரை தேச விரோத சக்தி என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்லமுடியும்.

தடா கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்ன பிறகுதான் எங்கே தன்னை கைதுசெய்து விடுவார்களோ என்று பயந்து அவர் காட்டுக்குள் செல்லவில்லை.

நான் தேச விரோத சக்தி என்று சொன்னதற்காக அல்ல. நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடம் இருந்து எப்படி மீட்கவேண்டும் என்கிற யோசனையை நான் வருகின்ற 13-ம் தேதி சட்டமன்றத்தில் தெரிவிப்பேன். நெடுமாறன் மீண்டுமகாட்டிற்குள் சென்றால் நாடு தனி நாடு ஆகிவிடும். அவர் ஒரு பிரிவினை வாதி. விடுதலைப் புலிகளின் ஒட்டுமொத்த ஏஜெண்ட் ஆக இருக்கிறார்.

நடிகர் ராஜ்குமார் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திரும்ப வேண்டும் என்பதுதான் த.மா.கா.வின் நோக்கம்.வீரப்பனை பொருத்த வரையில் கடந்த 6 ஆண்டுகளில் எந்த பிணைக் கைதியையும் கொலை செய்தது கிடையாது.

நிச்சயம் ராஜ்குமார் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என நிருபர்களிடம் கூறினார் சோ.பாலகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+