தமிழகத்திற்கு திமுக ஆட்சிதான் தேவை
ஸ்ரீவைகுண்டம்:
தமிழகத்தில் திமுக ஆட்சிதான் மீண்டும் வர வேண்டும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தாமரை ரதம் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்க நல்லூருக்குவந்தது.
அதன்பிறகு அவர் செய்துங்கநல்லூரில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் தாமரை ரத யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது.
ரத யாத்திரையை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:
இந்த ரத யாத்திரையின் உண்மையான நோக்கமே, இந்து ஆலயங்கள் அரசின் பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே. ஆன்மீக நோக்கம் கொண்ட,ஆதாயம் தேடாத மனப்பான்மை கொண்டவர்கள் கோவில் நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதுதான்.
கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் ஆலயங்கள் செம்மையாகச் செயல்படுவதற்குக் காரணம் அரசின் தலையீடு இல்லாததுதான். வாஜ்பாய் அரசு கடந்தஓராண்டு ஆட்சியில் உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிர வைத்துள்ளது. கடந்த தமிழக ஆட்சியில் ஜெயலலிதா தன்னை யாரும் தட்டிக் கேட்க முடியாதுஎன்று லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்.
ஊழல் வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றும் தான் செய்த தவறுகள் பற்றி சிறிது கூட வருத்தப்படாமல் அவர் உலாவருகிறார். ஊழல் செய்தவர்கள் மீண்டும தலைதூக்காதவாறு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வாஜ்பாய் அரசுக்கு உறுதுணையாக இருக்கின்ற தேசிய சிந்தனை கொண்ட நாம் சொல்வதை கேட்கின்ற திமுக தான் தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications