நாளை காட்டுக்குச் செல்கிறது தூதுக்குழு
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை மீட்கும் இறுதிக் கட்ட முயற்சியாக, தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை காட்டுக்குச் செல்கிறது.
இதுகுறித்து நக்கீரன் இணை ஆசிரியர் காமராஜ் சனிக்கிழமை கூறியதாவது:
வீரப்பனிடமிருந்து, நடிகர் ராஜ்குமாரை மீட்க அரசுத் தூதுக்குழு கடந்த வாரம் காட்டுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தது.
ஆனால் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறனை தேச விரோத சக்தி என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியதால்காட்டுக்குப் போக மாட்டேன் என்று நெடுமாறன் கூறிவிட்டார்.
இதைத் தொடர்ந்து நடிகர் ராஜ்குமாரின் மகன்கள், அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தமிழக முதல்வர்கருணாநிதி, டாக்டர் ராமதாஸ் ஆகியோரும் நெடுமாறன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து நெடுமாறன் தனது முடிவை மாற்றிக் கொண்டு காட்டுக்குச் செல்ல சம்மதித்து விட்டார்.
இந்த நிலையில் வீரப்பனுடன் 6 வது முறையாக பேச்சு வார்த்தை நடத்த அரசு தூதுக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையிலிருந்து சத்யமங்கலம்காட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்கள். மாலையில் அவர்கள் காட்டுக்குச் செல்வார்கள்.
பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, புதுச்சேரி சுகுமாறன் ஆகியோர் காட்டுக்குப் போவார்கள். நக்கீரன் கோபால் தனியாகக் காட்டுக்குச்செல்வார். காட்டு எல்லையில் நான்கு பேரும் ஒன்றாகச் சேர்ந்து வீரப்பனைச் சந்திக்கப் புறப்பட்டுச் செல்வார்கள்.
இந்த முறை சாதகமான சூழ்நிலை இருப்பதால் 2 அல்லது 3 நாட்களில் தூதுக் குழுவினர் நடிகர் ராஜ்குமாரை மீட்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் காமராஜ்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications