For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிதி நிறுவன அதிபர் குடும்பத்துடன் ஓட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொது மக்கள் பணத்துடன் தலைமறைவான ஆழ்வார்ப்பேட்டை பெனிபண்ட் நிதி நிறுவன அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர்குறித்துத் தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது.

சென்னை நகரில் உள்ள பல்வேறு நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்கள் சங்கக் கூட்டம்சனிக்கிழமை நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பொருளாதார குற்றப்பிரிவு டி.ஜி.பி. நெய்ல்வல் நிருபர்களுக்குஅளித்த பேட்டி:

ஆழ்வார்பேட் பெனிபிட் பன்ட் நிதி நிறுவனம் 84 ஆயிரம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ. 120 கோடி முதலீட்டுத் தொகையைமோசடி செய்துள்ளது. இது தொடர்பாக இந் நிறுவனத்தின் உரிமையாளர் கே.பி. சண்முகம் செட்டியார், அவரது மனைவிஉண்ணாமலை, அவர்களது மகன் ஹர்ஷவர்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தாங்கள் மூன்று தவணைகளில் ரூ. 10 கோடியை செலுத்துவதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் (ஹைகோர்ட்)ஜாமீன் பெற்றனர். ஆனால் பணத்தைச் செலுத்தாமல் சுப்ரீம் கோர்ட்டில், மனுதாக்கல் செய்தனர். சுப்ரீம் கோர்ட் அவர்களுடையமனுவை தள்ளுபடி செய்து சென்னை ஹைகோர்ட்டிற்கு கொடுத்த வாக்குறுதிப்படி பணத்தை திரும்ப செலுத்துமாறு உத்தரவிட்டது.

இந்த நிலையில், மூன்று பேரும் தலைமறைவாகிவிட்டனர். இவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் கொடுத்தவிலாசமும் போலியானவை. இவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும். அவர்கள் பற்றியவிவரமும் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும்.

தகவல் கொடுக்க விரும்புபவர்கள் குற்றப்பிரிவு ஐ.ஜி. அலுவலகத்திற்கு 5366912, 2334252 ஆகிய தொலைபேசி எண்களிலும்,எஸ்.பி.க்கு 5393359 (எக்ஸ்டென்ஷன் :349), 6203388 ஆகிய தொலைபேசி எண்களிலும், டி.எஸ்.பி.க்கு 8293629 என்றதொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் சொல்லலாம் என்றார் அவர்.

சரத் குமார் விவகாரம்:

இதற்கிடையே, ராயப்பேட்டை பெனிபிட் நிதி நிறுவனத்தில் தான் வாங்கிய கடனை, மாதம் ரூ. 50 லட்சம் கொடுத்து அடைத்துவிடுவதாக நடிகர் சரத்குமார் உறுதியளித்துள்ளார்.

சரத்குமார், ஆர்.பி.எப். நிதி நிறுவனத்திலிருந்து ரூ. ஒன்றரை கோடி கடன் வாங்கியிருந்தார். அது இப்போது வட்டியுடன் சேர்ந்துரூ. 3 கோடி ஆகியுள்ளது. தற்போது சன் டிவியில் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை சரத் தொகுத்தளிக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக சன் டிவிவழங்கும் பணத்தை மாதந்தோறும் ஆர்.பி.எப். நிறுவனத்திடம் செலுத்த சரத் குமார் தற்போது ஒத்துக் கொண்டுள்ளார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மாதம் ரூ. 50 லட்சம் வீதம் கடனை திருப்பி அடைப்பதாக உறுதி அளித்துள்ளார் சரத் குமார்.

இதேபோல, சிவாஜி கணேசன் மகன் ராம்குமார் ரூ. 69 லட்ச ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. அதில் ரூ. 5 லட்சம்பணத்தை அவர் செலுத்தி விட்டார் எனவும் நெய்ல்வால் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X