ரூ. 100 கோடியில் கம்பெனி நிர்வாகத் திறன் மேம்பாட்டு நிறுவனம்
கோவை:
கம்பெனிகளை திறமையாக நிர்வகிக்க நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூ. 100 கோடி செலவில் கம்பெனிநிர்வாகத் திறன் நிறுவனம் ஒன்றை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது என மத்திய கம்பெனி விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலர் ராமசாமி தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களுடன் நடந்த கலந்துரையாடலின்போது இணைச் செயலர் ராமசாமி கூறியதாவது:
கம்பெனிகளின் சட்டக் குறை தீர்ப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை ரூ. 136 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இந்தவசூல் நிதியிலிருந்து ரூ. 25 கோடி முதலீட்டில்,
கம்பெனிகளை திறமையாக நிர்வகிக்க உதவும் வகையில் கம்பெனி நிர்வாகத் திறன் மேம்பாட்டு நிறுவனம் ஒன்றைஅமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு ரூ. 70 முதல் 100 கோடி ரூபாய் வரை செலவாகும். இதற்குத் தேவையான நிதியை உலக வங்கியிடமிருந்துகடன் மூலம் பெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஆலோசனை செய்ய காமென்வெல்த் அமைப்புச்செயலக உதவியும் கோரப்படும்.
கூட்டுறவு இயக்கங்களை கம்பெனிகளாக மாற்றி அமைக்க கமிட்டி அமைக்கப்பட்டது. இந்தக் கமிட்டியின்பரிந்துரை விரைவில் மசோதாவாக நாடாளுமன்றத்தில், தாக்கல் செய்யப்படும்.
கூட்டுறவு இயக்கங்களை பொறுத்தவரை 3-ல் 2 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் அதனை நிறுவனமாகமாற்றி அமைக்க முடியும். இந்த நிறுவனத்தின் பங்குகளை உறுப்பினர்களுக்கு விற்பனை செய்யலாம். இதன் மூலம்வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கம்பெனிகள் கைமாறும் அபாயம் நீங்கும்.
ஒவ்வொரு கம்பெனிகளுக்கும் 21 எண்கள் கொண்ட "கோட் எண் அளிக்கப்படும். இந்த எண் மூலம் கம்பெனியின்அமைவிடம், எத்தகைய பொருட்களை உற்பத்தி செய்யக் கூடிய கம்பெனி என்பது உட்பட பல்வேறு தகவல்களைஅறிந்து கொள்ள முடியும்.
இந்த ஆண்டு செப்டம்பர் ரூ. 136 கோடி வசூலாகியுள்ளது. இந்தத் தொகையில் அனைத்து கம்பெனி பதிவுஅலுவலகங்களையும் கம்ப்யூட்டர்மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கம்பெனிகளின் செயல்பாடுகளை திறம்பட மாற்றி அமைக்க இந்த ஆண்டு இறுதியில் லண்டனிலிருந்துகாமென்வெல்த் நாடுகளின் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்யவிருக்கிறது என்றார் ராமசாமி.












Click it and Unblock the Notifications