சுப்ரீம் கோர்ட் கிளை வேண்டும் .. த.மா.கா.
கோவை:
தென் மாநிலங்களின் நீண்ட கால தேவையைப் பூர்த்தி செய்யும் விதத்திலும், வழக்குகளை விரைந்து முடிக்கவும் உச்சநீதிமன்ற கிளை ஒன்றை சென்னையில்அமைக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வழக்கறிஞர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலத்தில் நடந்த த.மா.கா.,வழக்கறிஞர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
மதுரையில் அமையவிருக்கும் உயர்நீதிமன்றக் கிளையின் கட்டட வேலைகளை உடனடியாகத் துவக்க வேண்டும்.
திருவாரூர், தேனி, நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், உடனடியாக மாவட்ட நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். புதிய மாவட்டங்களில்நீதிமன்றங்களின் எல்லை நிர்ணயிக்கப்படும் போது வழக்கறிஞர்களை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
மாநல, மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கத்தை குறைக்கவும், பணிச் சுமையை குறைக்கவும், காலியாக உள்ள மாஜிஸ்திரேட், நீதிபதிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
தமிழகத்தில் 35 ஆயிரம் பதிவு பெற்ற வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே, தமிழக அரசு இந்த வக்கீல்களின் நல நிதிக்காக ரூ. 25 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பயிற்சி பெறும் இளம் வழக்கறிஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 500 வீதம், உதவித் தொகையாக வழங்க வேண்டும்.
மாவட்ட அளவில் உள்ள வழக்கறிஞர்கள் நூலகத்திற்கு ஆண்டுக்கு ரூ. 20 ஆயிரம், தாலுகா அளவில் உள்ள நூலகங்களுக்கு ரூ. 10 ஆயிரம் அரசுநிதியுதவி அளிக்க வேண்டும்.
உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அமலில் உள்ள ஆங்கிலம், இந்தி மொழித் திட்டத்தைப் போலவே, தமிழகத்தில் இந்திய அரசியல் சட்டம்348 (2)வது பிரிவின்படி தமிழ் மொழியையும் உயர் நீதிமன்றத்தில் பயன்படுத்த அரசு ஆணையிட வேண்டும்.
தேச விரோத சக்திகளை அரசியல் கட்சிகள் சில ஆதரிக்கின்றன. இவை அரசின் சம்மதத்துடன் நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவேஇத்தகைய கட்சிகளின் மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். உடனடியாகஇத்தகைய நடவடிக்கையில் இறங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications