நீலகிரியில் தாமரை ரத யாத்திரை
கோவை:
பாரதிய ஜனதா நடத்தும் தாமரை ரத யாத்திரை நீலகிரியில் தொடங்கியது. இந்த ரத யாத்திரை கோவை, ஈரோடு, சேலம்மாவட்டங்கள் வழியாக திருச்சியை அடைகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் முன்னோட்டமாகவும், தனது சின்னத்தை கிராமங்கள் தோறும் பரப்ப வேண்டும் என்ற நோக்கத்திலும்,வாஜ்பாய் அரசின் சாதனைகளை விளக்கிச் செல்லவும் பாரதிய ஜனதா தமிழகம் முழுவதிலும் "தாமரை ரத யாத்திரை நடத்த முடிவுசெய்தது.
இந்த தாமரை ரத யாத்திரையின் முக்கிய நோக்கமே, வாஜ்பாய் அரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டுமானால் தாமரைக்குவாக்களிக்க வேண்டும் என்ற உட்கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டும். இதற்கு எளிதாக தாமரை ரத யாத்திரையை பா.ஜ.,தமிழகத்தில் பல இடங்களில் துவக்கியுள்ளது.
மாநிலத் தலைவர் கிருபாநிதி இந்த ரத யாத்திரையை திங்கள்கிழமை நீலகிரி மாவட்டத்தில் உள்ள எருமாடு என்ற இடத்தில்துவக்கினார். இதே போன்று தேன்கனிக் கோட்டையில் மாநில பா.ஜ. பொதுச் செயலர் இல.கணேசன் துவக்கினார். எருமாடுநிகழ்ச்சியில், மாநில வர்த்தகப் பிரிவுத் தலைவர் சேகர், தொகுதி எம்.பி., மாஸ்டர் மாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநிலத் தலைவர் கிருபாநிதி துவக்கிய தாமரை ரத யாத்திரை, 14ம் ததி நீலகிரி மாவட்டத்தைக் கடந்து மேட்டுப்பாளையம்வருகிறது. 15ம் தேதி கோவை மாவட்டத்திலும், 17ம் தேதி கோவை மாநகரிலும், 18ம் தேதி திருப்பூரிலும், 19ம் தேதி கோவைதெற்கு மாவட்டத்திலும் பயணத்தை தொடர்கிறது.
நவம்பர் 19ம் தேதி முதல் 21 ம் தேதி வரை ஈரோட்டிலும், 23ம் தேதி தர்மபுரி, சேலம் மாவட்டங்களிலும், 28, 29 ம் தேதிசங்ககிரியிலும் பயணம் மேற்கொள்கிறது. 30 ம் தேதி நாமக்கல் வழியாகவும், டிசம்பர் 1 கரூர் மாவட்டத்திலும், பயணம்செய்கிறது.
இறுதியாக 2ம் தேதி திருச்சியை அடையும் இந்த தாமரை ரத யாத்திரை முடிவில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications