For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வியட்நாமில் ஒரு "லிட்டில் ஸ்டார்!

By Staff
Google Oneindia Tamil News

ஹனோய் (வியட்நாம்):

Amirtha Varshini the Little Starவியட்நாமின் ஹனோய் நகரில் அம்ரித வர்ஷினி என்ற "லிட்டில் ஸ்டார், எல்லோரையும் அசத்துகிறாள்.

அம்ரித வர்ஷினிக்கு இன்னும் 3 வயது கூட ஆகவில்லை என்பதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. ஹனோய் நகரிலுள்ள ஹோட்டல்சொஃபிடல் மெட்ரோபோலியில் பணியாற்றுபவர் எஸ்.நந்தகுமார். இவரது மகள்தான் அம்ரித வர்ஷினி. 1997-ம் ஆண்டு டிசம்பர் மாதம்12-ம் தேதி பிறந்தவள் அம்ரித வர்ஷினி (சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள்!).

இந்த "லிட்டில் ஸ்டாரின் ஞாபக சக்தி அவளது வயதுக்கு அதிகம். நமக்கெல்லாம் ஆச்சரியம். 192 நாடுகளின் கொடிகளை மடமடவென்றுஒப்பிக்கிறாள் அம்ரிதா. இதுபோதாதென்று, ஐக்கிய நாடுகள் சபை, செஞ்சிலுவைச் சங்கம், ரெட் கிரஸன்ட் ஆகியவற்றின் கொடிகள், குனாம்,கிரீன்லான்ட் ஆகிய தீவுகளின் கொடிகளையும் சரியாக சொல்கிறது இந்த மழலை.

கொடிகள் மட்டுமல்லாது, காட்டு விலங்குகளின் பெயர்களையும் சரியாகச் சொல்கிறாள் அம்ரிதா. அது எந்தப் பிராந்திய விலங்கு என்பதும்கூட அம்ரிதாவுக்கு அத்துப்படி. விலங்கு தவிர, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றையும் விடவில்லை அம்ரிதா.

60 நாடுகளின் தலைநகரங்கள் அம்ரிதாவுக்கு மனப்பாடமாகத் தெரியும். இதுதவிர ஜனாதிபதியின் பெயர், பிரதமருடைய பெயர்,முதல்வரின் பெயர்களைச் சரியாகச் சொல்கிறாள். தேசிய சின்னங்களும் அம்ரிதாவுக்கு நல்ல மனப்பாடம்.

ஏ.பி.சி.டி.யைத் தலைகீழாக மனப்பாடம் செய்து வைத்திருக்கிறாள் அம்ரிதா. அதை சரியாகவும் எழுதிக் காட்டுகிறாள். எண்களும் நன்றாகத்தெரிகிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சில நர்சரி "ரைம்ஸ் களையும் ஒப்பிக்கிறாள்.

கணக்கையும் விடவில்லை அம்ரிதா. பல கோணங்களை சரியாகச் சொல்கிறாள். அது பென்டகனா அல்லது ஹெக்ஸகனா என்பதைசரியாகக் கூறுகிறாள்.

அம்ரிதாவுக்கு தெரியாத ஒரே கொடி கிழக்கு தைமூரின் கொடி மட்டுமே. அது பெரிய விஷயமல்ல. கிழக்கு தைமூரின் கொடி நம்மில்பலருக்கே தெரியாது அல்லவா?

ஒரு நாட்டின் பெயரை மட்டும் அம்ரிதாவிடம் கூறினால் போதும். அந்த நாட்டின் கொடியை சரியாக காட்டுவாள். அதேமாதிரி, கொடியைக்காட்டினால், நாட்டை கூறுவாள்.

பூச்சிகளும் அம்ரிதாவுக்கு நல்ல "பழக்கம். என்ன பூச்சி என்பதை நமக்கு சரியாக கூறுவாள். ஒரு வாகனத்தைக் காட்டி அதன் பெயரைக்கேட்டால், அது என்ன வாகனம் என்பதையும் சரியாகச் சொல்கிறாள்.

வயதுக்கு மீறிய அதிபுத்திசாலித்தனம் எல்லோருக்கும் கிடைக்காது. அப்படி இருப்பவர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள். அம்ரிதாவும்,அவளது பெற்றோரும் அந்தப் பட்டியலில் இருப்பது அவர்களது அதிர்ஷ்டம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

இன்று குழந்தைகள் தினம். வாழ்த்துவோம் இந்த மழலை மேதையை!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X