கை வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது
டல்ஹெளசி (அமெரிக்கா):
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சில கவுன்டிகளில் பதிவான வாக்குகளைகையால் எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த செவ்வாய் கிழமையன்று அமெரிக்காவில் 43-வது அதிபரைதேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தஜார்ஜ் புஷ், ஜனநாயகக் கட்சியைச் சேரந்த அல் கோரைக் காட்டிலும் 1,784 வாக்குகள்அதிகம் பெற்றார்.
முதலில் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் புளோரிடா மாநிலவாக்குப் பதிவில் குழப்பம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. மேலும், அல் கோர் கேட்டுக்கொண்டபடி மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடங்யது. அப்போது புஷ் 288வாக்குகள் மட்டுமே முண்ணனியில் இருப்பதாக தெரிந்தது.
இத்ை தொடர்ந்து இயந்திரம் மூலமாக எண்ணப்பட்ட வாக்குகள், கையால்எண்ணப்பட்டு வருகின்றன. ஜனநாயக கட்சிக்கு அதிக ஆதரவு உள்ள பகுதிகளில்வாக்குகளை கையால் எண்ண வேண்டும் என்று குடியரசுக் கட்சி நீதிமன்றத்தில் மனுசெய்திருந்தது. ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இதற்கிடையே, கையால் ஓட்டுக்களை எண்ணுவதை நிறுத்தக கூடாது என்று ஜனநாயககட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவின் வாக்கு எண்ணிக்கையே அமெரிக்காவின் அடுத்த அதிபரைநிர்ணயிக்க இருக்கிறது. இங்கு இரண்டு வேட்பாளருமே மிகச் சிறிய இடைவெளியியேஒருவரை விட ஒருவர் முண்ணனியில் இருந்து வருகின்றனர்.
புஷ்ஷின் ஆதரவாளர்கள், புளோரிடாவில் இயந்திரம் மூலம் எண்ணப்பட்ட வாக்குஎண்ணிக்கையின் முடிவையே கோர் ஒப்புக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.
ஆனால் பல கவுண்டிகளிலும் ஓட்டு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளதால்கையால் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுவது தொடர வேண்டும் என ஜனநாயகக் கட்சிகூறியுள்ளது.
இதற்கிடையே, புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் தேர்தல் அதிகாரிகூறுகையில், 67 கவுண்டிகளின் வாக்கு எண்ணிக்கை குறித்த முடிவு செவ்வாய் கிழமை,அமெரிக்க நேரப்படி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும். அவ்வாறு புதியமுடிவுகள் தெரிவிக்கப்படா விட்டால், கடைசியாக எண்ணப்பட்ட இயந்திர வாக்குஎண்ணிக்கையின் முடிவு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என கூறியுள்ளார்.
அரசுத் தரப்பு செயலாளர் காதரின் ஹாரீசும் இதே கருத்தையே தெரிவித்துள்ளார் இதன்படி பார்த்தால், கோரை விட 288 வாக்குகள் அதிகம் பெற்று முண்ணனியில் உள்ளஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றவர் ஆவார்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications