கில் தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் கமிஷனர்எம்.எஸ் கில் தலைமையில் சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மிருத்ஞ்சய் சாரங்கி செவ்வாய் கிழமை இதுகுறித்துசென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வாக்களர்களுக்கு தமிழ்நாட்டில் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கும்பணி சற்று தாமதமாக தொடங்கியது. இருப்பினும் கடந்த 7-ம் தேதி வரை உள்ளகணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டில் 62 சதவிகிதம் வாக்களர்களுக்கு போட்டோ ஒட்டியஅடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த பணி இந்த மாதம் 30-ம் தேதி வரை நடைபெறும். ஜனவரி மாதம்திருத்திய வாக்களர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் எம்.எஸ் கில் புதன்கிழமைசென்னையில் ஆலோசனை நடத்துகிறார். அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கட்சிபிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேசுகிறார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 10 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை அவர் சந்தித்துபேசுவார். புதன்கிழமை காலை 11.30 மணிக்கு ராஜ்பவனில் இந்த சந்திப்புநடைபெறுகிறது.
காலையில் 4 கட்சி பிரதிநிதிகளை அவர் சந்திக்கின்றார். மதியம் 1.30 மணிக்குதலைமை செயலாளர், உள்துறைச் செயலாளர். டி.ஜி.பி. மற்றும் தேர்தல்அதிகாரிகளுடன் அவர் ஆய்வு நடத்துவார்.
இந்த ஆய்வு முடிந்து மீண்டும் பிற்பகல் 4 மணிக்கு மற்றும் சில கட்சி பிரதிநிதிகளைசந்தித்துப் பேசுவார். இவை தவிர வியாழக்கிழமை தமிழக தேர்தல் அதிகாரிகளுடன்ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்துகிறார்.
செவ்வாய் கிழமை மாலை 4 மணிக்கு சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்புவிழாவில் கலந்து கொண்டு பேசுகிறார்
தமிழக சட்டசபை பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதியுடன்முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்பு தேர்தல் நடத்தியே ஆக வேண்டும்.
இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இயந்திரஓட்டுப்பதிவு நடத்தப்படும். இதன் மூலம் செலவும் குறையும். ஓட்டு எண்ணிக்கையும்விரைவில் நடந்து முடியும் என்றார் அவர்.
முன்னதாக, புதுவை சென்ற கில் அங்கு நிருபர்களிடம் பேசுகையில், அரசியல்கட்சிகள், பொது மக்களின் ஒத்துழைப்புடன் வாக்காளர் அடையாள அட்டைகொடுக்கும் பணி நடந்து வருகிறது.
வரும் தேர்தலில் இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெறும். புதுவையில் சில தமிழகபகுதிகளும்,தமிழகத்தில் சில புதுவை பகுதிகளும் உள்ளன. இதனால் கள்ள ஓட்டுபோட வாய்ப்பு உள்ளது.
இதனால் வருகின்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை கட்டாயமாக்கப்படும்.அடையாள அட்டை இல்லாதவர்கள் தகுந்த சான்றிதழ் காட்டித்தான் ஓட்டுப் போடமுடியும். இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
அனைத்து மாநிலங்களையும் சேர்த்து மொத்தம் 62 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள்உள்ளனர். அனைவரின் பெயர், விவரமும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதைப் போன்ற பட்டியல் அமெரிக்காவில் கூட இல்லை. கடந்த தேர்தலில்இந்தியாவில் 65 சதவிகிதம் பேர்தான் வாக்களித்துள்ளனர் என்றார் கில்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications