கருணாநிதியைக் குறை கூறுகிறார் ராமதாஸ்
திருச்சி:
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதிஎன்னிடம் ஆலோசனை எதுவும் நடத்தவில்லை என்று பா.ம.க. தலைவர் ராமதாஸ்குற்றம் சாட்டினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அளித்த பேட்டி:
தமிழ்நாட்டில் பல தொழிற்சாலைகள் மூடப்படுவதற்கும், பெரும்பாலானதொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்குவதற்கும் அதிகாரிகளின் திறைமையற்றநிர்வாகம்தான் காரணம்.
தற்போதிருக்கும் தமிழக அரசு விவசாயிகளின் நலன்களைப் பற்றிகவலைப்படவில்லை, விவசாயிகளின் வாழக்கைத் தரம் கொஞ்சமும் மாறவில்லை.மாறாக அவர்களது கடன் சுமைதான் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருக்கிறது.விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்க தமிழக அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவசமாக வீடு கட்டித் தரும் திட்டத்தைதமிழக அரசு கொண்டு வர வேண்டும். ஊதியத்தில் வீட்டு வாடகைப்படி பெறும்அதிகாரிகளுக்கு விவசாய நிலங்களில் வீடு கட்டித் தருவதற்கு பதிலாக வேறுஇடங்களில் வீடு கட்டித்தர வேண்டும்.
திருவண்ணாமலையில் உள்ள விதை நெல் பண்ணை மூடப்படும் நிலையில் உள்ளது,.இந்த நெல் பண்ணையை சீரமைக்க நடவடிக்கைள் எடுக்க வேண்டும்.
சந்தன கடத்தல் வீரப்பனால் நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்தும்அவரை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர்ஜார்ஜ் பெர்ணான்டஸ் சமீபத்தில் சென்னை வந்த போது என்னை அழைத்துப்பேசினார்.
கர்நாடக முதல்வர் எஸ்.எம், கிருஷ்ணாவும் இப்பிரச்சனை குறித்து என்னிடம்ஆலோசனை நடத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கும் கருணாநிதி.என்னிடம் இது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடத்தவில்லை. கூட்டணிக் கட்சித்தலைவர் என்ற முறையில் கூட இதுபற்றி அவர் என்னிடம் விவாதிக்கவில்லை.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைகூட்டியிருக்கலாம். அனால், அதையும் கருணாநிதி செய்யவில்லை.
நடிகர் ராஜ்குமாரை உடனடியாக விடுதலை செய்யும்படி வீரப்பனுக்கு நான் கடிதம்எழுதியிருக்கிறேன். தூதுக்குழுவில் இடம் பெற்றுள்ள பாண்டிச்சேரி சுகுமாரனிடம்இந்த கடிதத்தை கொடுத்து அனுப்பியுள்ளேன் என்றார் ராமதாஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications