இந்தியாவுக்கான கடனுதவி அதிகரிக்கப்படும் .. உலக வங்கி
டெல்லி:
இந்தியாவிற்கு ஒவ்வொரு வருடமும் வழங்கும் 3 பில்லியன் டாலர்கள் தவிர கூடுதலாக கடனுதவி அளிக்க உலக வங்கி விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தக் கூடுதல் தொகை இந்தியாவில் உலக வங்கி மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 79 க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு உதவிகரமாகஇருக்கும்.
உலக வங்கித் தலைவர் ஜேம்ஸ் உல்பன்சன், உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்துவதற்காக இந்தியாவில் 8நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். சுற்றுப்பயண முடிவில் டெல்லியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவிற்கு வழங்கும் கடன் தொகையை அதிகரிக்க உலக வங்கி திட்டமிட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகிறது.இதை அதிகரித்து, வருடத்திற்கு 12 பில்லியன் டாலர்கள் கடன் தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
உலக வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் குறிப்பாக மின்சாரம், தகவல் தொடர்பு மற்றும் நீர் வள மேம்பாட்டிற்காக அதிக முக்கியத்துவம்கொடுக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் உலக வங்கி உதவியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் திட்டங்களை நாங்கள் ரத்து செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. திட்டங்கள்இன்னும் விரிவுபடுத்தப்படும். இதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய உலக வங்கி முன்வரும்.
மேலும் உலக வங்கி உதவியுடன், செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கிறது. இதன் மூலம்பெண்களின் வாழ்க்கை நிலை மேம்பாடு அடையும்.
இந்தியா மட்டுமின்றி பிற நாடுகளிலும், உலக வங்கி பல செயல்திட்டங்களை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையை வறுமையை ஒழிப்புத் திட்டங்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறப்பாக பயன்படுத்தி வருகிறார். அவர் ஒருசீர்திருத்தவாதி என்றார் உல்பன்சன்.
தனது இந்திய பயணத்தின்போது, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உலக வங்கி மூலம்செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளை உல்பன்சன் பார்வையிட்டார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications