"கொலையான தந்தையுடன் மகள் கோர்ட்டில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

கோவை:

கொலையான தந்தையை, கோர்ட்டில் சாட்சி சொல்ல அழைத்து வந்தார் ஒரு பெண்.கோவை நீதிமன்றத்தில் நடந்த இந்த ஆள் மாறாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சாய்பாபா காலனியையடுத்துள்ள குப்பகோணம் புதூரைச் சேர்ந்தவர் ராணி(29). இவருக்கும் இவரது கணவர் சுப்பிரமணியத்திற்கும் ஏற்பட்ட தகறாரால்இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அப்போது இவரது தந்தை பழனிச்சாமி உறுதுணையாக இருந்து வந்துள்ளார்.இருவரும் வருமானமின்றி வறுமையில் வாடி வந்தனர்.

அப்போது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு மில் அதிபருக்கும் ராணிக்கும் இடையேஉறவு மலர்ந்தது. இந்த உறவு கள்ளக்காதலாக மாறியது.

இதன் விளைவாக சாய்பாபா காலனியில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் வீடு பிடித்துகுடியேறினர். அப்போது உடனிருந்த தந்தை பழனிச்சாமியும் வசதியாக வாழத்தொடங்கினர். இதனால், கள்ளக்காதலுக்கு எதிர்ப்புக் கிளம்பவில்லை.

பொள்ளாச்சியைச் சேர்ந்த தொழிலதிபர் என்பதால் வாரம் இரண்டு நாட்கள் மட்டுமேஅபார்ட்மெண்டில் ராணியுடன் வந்து தங்கினார். மீதி நாட்களில் ராணி தனிமையாகஇருந்து வந்துள்ளார்.இந் நிலையில், அதே அபார்ட்மெண்டில் குடியேறிய பாஷாஎன்பவருடன் ராணிக்குப் பழக்கம் ஏற்பட்டது. பாஷாவிடம் மயங்கிய ராணிக்குஅவரது தந்தை பழனிச்சாமி இடையூறாக இருந்துள்ளார்.

பழனிச்சாமியைத் தீர்த்துக் கட்ட பாஷாவும் ராணியும் முடிவு செய்தனர். இதன்படிபழனிச்சாமியைக் கொன்று செப்டிக் டேங்கில் போட்டு மூடிவிட்டனர். இதையடுத்து,செப்டிக் டேங்கில் நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அபார்ட்மென்ட்டில் குடியிருந்தோர்போலீசில் புகார் செய்தனர். போலீசார் வந்து சோதனை செய்ததில், பழனிச்சாமியின்உடல் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து ராணி மற்றும் அவரதுகாதலன் பாஷா ஆகியோரைக் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை தன்மைநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் முக்கியத் திருப்பமாக தந்தை இறந்துபோனதாகக் கூறப்பட்டநிலையில், உண்மையான தந்தையை ராணி நீதிமன்றத்தில்ஆஜர் செய்ய அனுமதி கோரினார்.

இதற்கு நீதிபதி அனுமதி வழங்கினார். ராணி, தனது உண்மையான தந்தைவெள்ளையன் தான் எனக் கூறி அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்தார். இதனால்இப்போது வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை நீதிபதிதணிகாசலம் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+