மது கடத்தலில் எம்.எல்.ஏ. அண்ணன் கைது
கோவை:
போலி மது கடத்தல் தொடர்பாக தி.மு.க. எம்.எல்.ஏ., சாமிநாதனின் அண்ணன் குப்புசாமியைப் போலீசார் கைது செய்தனர். இதனால் ஈரோடுமாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அருகே போலீசார் புதன்கிழமை போலி மது கடத்தி வந்த வேனை கைப்பற்றினர். வேன் டிரைவர் பழனிச்சாமி, தப்பி ஓடும்போது கிணற்றில்தவறி விழுந்து இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், போலி மது முத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் பதுக்கி வைத்திருப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இந்த தகவலின்அடிப்படையில், முத்தூர்- ஈரோடு ரோட்டில் உள்ள சாமியப்பா திருமண மண்டபத்தில் சோதனை செய்தனர். இந்த சோதனையில் 93 அட்டைப் பெட்டிகளில்மதுபாட்டில்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
மேலும், இந்த திருமண மண்டபத்தில் அரசு முத்திரையுடன் கூடிய (ஹோலோகிராம்) லேபிள்களையும் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசார் தொடர்ந்துநடத்திய விசாரணையில் ஈரோடு தி.மு.க தெற்கு மாவட்டச் செயலரும் வெள்ளகோயில் எம்.எல்.ஏ.,வுமான முத்தூர் சாமிநாதனின் அண்ணன் குப்புசாமிஎன்ற எம்.பி.கிருஷ்ணகுமார் செய்யப்பட்டார்.
முத்தூரில் உள்ள குப்புசாமி திருமண மண்டபம் இவருக்குச் சொந்தமானது என்றும், இவரது கடைக்கு போலி மது பாட்டில்கள் கோவைமாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்டு இந்த மண்டபத்தில் பதுக்கி வைத்துள்ளதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications