துண்டிக்கப்பட்ட கை மீண்டும் இணைந்தது
மதுரை:
மோதலில், வெட்டப்பட்ட கையை அறுவை சிகிச்சையின் மூலம் மதுரை அப்பல்லோமருத்துவமனை டாக்டர்கள் வெற்றிகரமாக சேர்த்தனர்.
மதுரை புதுக்குளத்தில் வசித்து வருபவர் முருகவேல் என்ற வாலிபர். குடும்பத்தகராறில் இவரது இடது கை வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கையை பாலிதின்பையில் எடுத்துக் கொண்டு முருகவேலை அவரது உறவினர்கள் மதுரையில் உள்ளஅப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
மருத்துவர்கள் போலீசாருடன் கலந்து ஆலோசித்த பின் அவருக்கு அறுவை சிகிச்சைமூலம் மீண்டும் கையை இணைக்க முடிவு செய்தனர். இந்த அறுவை சிகிச்சைக்குஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் முருகவேல்குடும்பத்தாரிடம் அந்த அளவுக்கு வசதி இல்லை.
இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபை சபாநாயகர் பழனிவேல் ராஜனுக்கு இந்த தகவல்தெரிவிக்கப்பட்டதும் அவர் உதவி செய்ய சம்மதித்தார். இதைத் தொடர்ந்து அறுவைசிகிச்சை துவங்கியது.
முதலில் ரத்த சகதியில் இருந்த வெட்டப்பட்ட கை சுத்தம் செய்யப்பட்டு வேறு ஒருசுத்தமான பாலிதின் பையில் அறுவை சிகிச்சை முடியும் வரை பாதுகாப்பாகவைக்கப்பட்டது.
15 மணி நேர அறுவை சிகிச்சை நடந்தது. முருகவேலின் வெட்டப்பட்ட கை மீண்டும்இணைக்கப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சையின் போது 8 பாட்டில் ரத்தம்செலுத்தப்பட்டது.
இன்னும் 6 மாதத்தில் அவர் பூரண குணமடைவார் எனவும், துண்டிக்கப்பட்டுஇணைக்கப்பட்ட கை மறுபடியும் வேலை செய்ய 6 மாதமாகும் எனவும் மருத்துவர்கள்தெரிவித்தனர்,
இந்த அறுவை சிகிச்சை சர்க்கரை வியாதி உள்ளவர்கள், வயது முதிர்ந்தவர்கள், இதயநோய் உள்ளவர்களுக்கு செய்ய இயலாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications