வீரப்பன் கோரிக்கையை அரசு ஏற்றது?
சென்னை:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிப்பதற்காக தமிழக அரசு வீரப்பனின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. அவை என்ன என்பது குறித்து பின்னர் தெரியவரும் என்று சிறையில் உள்ள தமிழ்த் தீவிரவாதிரேடியோ வெங்கடேசன் கூறியுள்ளார்.
குள்ளஞ்சாவடி காவல் நிலையத் தாக்குதல் மற்றும் வேலூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்டுகைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெங்கடேசன், காவல் நீட்டிப்பிற்காக புதன்கிழமை சென்னை சிறப்புநீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டார்.
காவல் நீட்டிப்புக்குப் பின் நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் கூறுவதுசரியான தகவலே. இதுகுறித்து விரைவில் அனைவருக்கும் தெரிய வரும்.
மனிதாபிமான அடிப்படையில்தான் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டுள்ளார். எங்களது போராட்டம் தொடரும். நாங்கள்சிறையில் இருக்கிறோமோ அல்லது வெளியில் இருக்கிறோமோ என்ற கவலையே கிடையாது. எங்கிருந்தாலும்நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.
நவம்பர் 30-ம் தேதி வரை காவலை நீட்டித்து தடா நீதிமன்ற நீதிபதி எம்.சின்னப்பாண்டி உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications