ராஜ்குமார் விடுதலை: கடத்தப்பட்ட பண்ணைக்கு செல்கிறார்
சென்னை:
கடந்த 108 நாட்களாக வீரப்பன் பிடியில் இருந்து வந்த கன்னட நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.
அவரை வீரப்பன் செவ்வாய்க்கிழமை இரவில் விடுவித்தான் என தமிழக முதல்வர் கருணாநிதி, கர்நாடக சட்டஅமைச்சர் சந்திரே கெளடா, நடிகர் அம்பரீஷ் ஆகியோர் பெங்களூரில் நிருபர்களிடம் புதன்கிழமை காலைதெரிவித்தனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் கிருஷ்ணாவும் இத் தகவலைத் தெரிவித்தார்.
காட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட ராஜ்குமார், பவானி அருகே உள்ள அவள்பூந்துறை என்ற இடத்தில் அரசு சுற்றுலாமாளிகையில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து நெடுமாறனுடன் ஒரே காரில் அவர் தொட்டகாஜனூர்பண்ணை வீட்டுக்குச் செல்கிறார். இந்த இடத்திலிருந்து தான் ராஜ்குமார் கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பண்ணை வீட்டில் ஒரு நாள் தங்கிவிட்டு வியாழக்கிழமை பெங்களூர் திரும்ப அவர் திட்டமிட்டுள்ளார் எனகிருஷ்ணா கூறினார்.
பெங்களூரில் ராஜ்குமார் மருத்துவனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனத் தெரிகிறது.
கருணாநிதி அறிக்கை:
இந் நிலையில் சென்னையில் முதல்வர் கருணாநிதி நிருபர்களிடம் கூறுகையில்
ராஜ்குமார் விடுவிக்கப்பட்டுவிட்டார். என்னிடம் அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரைவிடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
முரசொலி மாறனின் உடல் நிலை குறித்து விசாரித்தார். 3 மாதம் காட்டில் இருந்து விட்டீர்களே எனக் கேட்டேன்,அதற்கு பதிலளித்த ராஜ்குமார், ராமரே 14 வருடம் காட்டில் இருந்தாரே என்றார்.
பின்னர் நெடுமாறனுடன் அவர் ஒரே காரில் காட்டுப் பகுதியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
ராஜ்குமார் மிகவும் களைத்துப் போயுள்ளார். நெடுமாறனும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்.
தமிழகத்துக்கு நன்றி சொல்வதற்காக சில நாட்களில் சென்னைக்கு வருவதாகவும் ராஜ்குமார் தெரிவித்தார் என்றார்.
கடந்த ஜூலை 30ம் தேதி அவர் கடத்திச் செல்லப்பட்டார்.
நக்கீரன் கோபால் பல முறை வீரப்பனுடன் பேசியும் அவரால் ராஜ்குமாரை விடுவிக்கஇயலவில்லை. ஆனால், தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தனதுஇரண்டாவது பயணத்திலேயே ராஜ்குமாரை மீட்டுக் கொண்டு வந்துள்ளார்.
வீரப்பனுக்கு தமிழ் தீவிரவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்ட பின் கோபாலை அவன் ஒதுக்கஆரம்பித்துவிட்டான்.
ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் சிறையில் உள்ள 121 தமிழ் தடா கைதிகளை விடுவிக்கவேண்டும், தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தீவிரவாதிகள் 5 பேரை விடுவிக்க வேண்டும் என வீரப்பன் கோரிக்கைவைத்திருந்தான். ஆனால், இந்த இரு பிரச்சனைகளும் இப்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
தடா கைதிகளையும், தீவிரவாதிகளையும் விடுவிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்ததோடு மட்டுமல்லாமல், இருமாநில அரசுகளையும் கடுமையாக சாடியது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், நிபந்தனைகளை ஏற்றுகைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்பதை வீரப்பன் தெளிவாகப் புரிந்து கொண்டதால் தான்ராஜ்குமாரை விடுவித்துள்ளான்.
வீரப்பனுக்கு ரூ. 30 கோடி வழங்கப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. ஆனால், இதை தமிழகம் மறுத்துள்ளது.
கோபால் இன்னும் ஈரோட்டில் தான் இருக்கிறார்.
ஈரோட்டில் ராஜ்குமார் குடும்பம்:
முன்னதாக இரவில் ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட தகவல் கிடைத்த உடனேயே ராஜ்குமாரின் குடும்பத்தினர்அதிகாலையில் ஈரோட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தொட்டகாஜனூரில் ராஜ்குமாரை சந்திப்பர்.பின்னர் அனைவரும் சேர்ந்து பெங்களூர் திரும்புவர் எனத் தெரிகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications