ஊழியர்கள் ஸ்டிரைக்: வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன
டெல்லி:
இந்தியா முழுவதும் புதன்கிழமை வங்கி ஊழியர்கள், வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம் நடத்தியதால் வங்கிப் பணி முழுவதும் ஸ்தம்பித்தது.
10 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதாக அகில இந்திய வங்கி அலுவலர்கள் சம்மேளனம்தெரிவித்தது.
அகில இந்திய வங்கி அலுவலர் சம்மேளனத் தலைவர் டிஎன்.கோயல் நிருபர்களிடம் கூறுகையில், ஊழியர்கள்வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன. வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு,வங்கி அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் முழு ஆதரவு இருந்தது.
வங்கிகள் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.ஏற்கனவே மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் கடன்வாங்கியுள்ளனர். அவற்றை அவர்கள் இன்னும் அடைக்காத நிலையில் அவர்களிடமே வங்கிகளை ஒப்படைப்பதைகண்டிக்கிறோம்.
இவர்கள் வங்கிகளில் கடனாகப் பெற்று சுரண்டிய தொகையே ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் ஆகும். இந்தநிலையில், வங்கிகளைத் தனியார் மயமாக்குவது கண்டிக்கத்தக்கது என்றார் அவர்.
சென்னையிலும் பாதிப்பு:
சென்னையிலும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் யாரும்வேலைக்கு வரவில்லை. ஒரு லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அகில இந்திய வங்கி அதிகாரிகள் சம்மேளன சென்னை பிரிவு தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் வங்கிஊழியர்கள், வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அவர்கள் இந்தியன்வங்கியிலிருந்து ஊர்வலமாகச் சென்று பாரிமுனை வழியாக தலைமைச் செயலகத்துக்குச் சென்றனர்.
வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து வரும் 20 ம் தேதி நாடாளுமன்றத்தில் மசோதாநிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றுஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பின்னர், முதல்வர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்தனர்.
யு.என்.ஐ.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications