பெங்களூர் வந்தார் ராஜ்குமார்
பெங்களூர்:
ஈரோட்டிலிருந்து ஹெலிகாப்டரில் பெங்களூர் வந்தடைந்தார் ராஜ்குமார்.
அவருக்கு ஜக்கூர் விமான நிலையத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
முன்னதாக பெங்களூரிலிருந்து அனுப்பட்ட 2 ஹெலிகாப்டர்கள் வியாழக்கிழமை ஈரோடு மாவட்டம் சிங்கம்பட்டிகிராமத்தில் உள்ள மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் இறங்கின.
தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகரின் பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த ராஜ்குமார் மற்றும் அவரதுகுடும்பத்தினர் இங்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு அந்த ஊர் மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பின்னர் ராஜ்குமாரும் பர்வதம்மாவும் ஒருஹெலிகாப்டரிலிலும் மற்றவர்கள் ஒரு ஹெலிகாப்டரிலும் ஏறி பெங்களூர் கிளம்பினர்.
12.00 மணிக்கு பெங்களூர் வந்து சேர்ந்த ராஜ்குமாரை வரவேற்க விமான நிலையத்தில் பெரும் திரளானஎண்ணிக்கையில் அவரது ஆதரவாளர்கள் கூடினர். வெடிகளை வெடித்து அவரை வரவேற்றனர்.
அவரைச் சந்திப்பதற்காக ரசிகர்கள் இடையே பெரும் அடிதடியே நடந்தது. இதையடுத்து கூட்டத்தைக் கலைக்கபோலீசார் தடியடி நடத்தினர்.
மிகவும் களைப்புடன் காணப்பட்ட ராஜ்குமார், அங்கிருந்து கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதானசெளதாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர் பொது மக்களையும் நிருபர்களையும் சந்திக்க உள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications