நஷ்டத்தில் அரசு கூட்டுறவு நூற்பாலைகள் .. அமைச்சர்
ஈரோடு:
அரசு சார்பில் தமிழகத்தில் இயங்கி வரும் 14 கூட்டுறவு நூற்பாலைகளில் 2 மட்டுமே லாபத்தில் இயங்கி வருவதாகமாநில கைத்தரித் துறை அமைச்சர் என்.கே.கே.பெரியசாமி கூறினார்.
ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே பெரியசாமிகூறியதாவது:
தமிழகத்தில் இயங்கும் 14 கூட்டுறவு நூற்பாலைகளில் இரண்டு மட்டுமே லாபத்தில் இயங்கி வருகின்றன. அரசின்பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மற்ற கூட்டுறவு சங்கங்களும் லாபத்தில் இயங்க வழி வகுக்கப்படும். லாபத்தில்இயங்காவிட்டாலும், நஷ்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னிமலையில் செயல்பட்டு வரும் சென்கோப்டெக்ஸ், ஒரு கோடியே 85 லட்ச ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.அதே போல் சென்டெக்ஸ் ஒரு கோடியே 60 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.
இலவச வேஷ்டி சேலைகளின் தரம், அளவு ஆகியவற்றை நிர்ணயிக்க குறியீட்டு எண் வழங்கப்படவுள்ளது.கைத்தறிகளுக்குக் கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் போக, மீதமுள்ளவை தான் விசைத் தறிகளுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.
வரும் தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் இலவச வேஷ்டி சேலைகள் ரூ. 1.54 கோடி செலவில்தயார் செய்யப்பட்டுள்ளன. இலவச வேஷ்டி சேலை தயாரிக்கும் பணி 80 சதவீதம் முடிவடைந்து விட்டது.
கைத்தறிகள் மூலம் 48 லட்சத்து 10 ஆயிரம் வேஷ்டிகளும், 21 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளும்தயாரிக்கப்பட்டுள்ளன. 98 ஆயிரம் சேலைகள், 67 லட்சத்து 42 ஆயிரம் வேஷ்டிகள் விசைத் தறிகள் மூலம்தயாரிக்கப்பட்டுள்ளன.
வரும் டிசம்பர் மாதம், 31 ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு வேஷ்டி சேலைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications