கர்நாடக தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்த கோபால்
சென்னை:
நடிகர் ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்கும் முயற்சியில் சாதனை செய்துள்ளதாகநக்கீரன் ஆசிரியர் கோபால் தெரிவித்துள்ளார்.
நக்கீரன் ஆசிரியர் கோபால் வெள்ளிக்கிழமையன்று சென்னையில் அறிக்கைவெளிட்டார். அந்த அறிக்கையின் விவரம் வருமாறு:
ராஜ்குமார் விடுதலையை மட்டுமே ஒரே குறிக்கோளாகக் கொண்டு தமிழக,கர்நாடகஅரசுகள் செயல்பட்டன. பல கண்டனங்களை இரு அரசுகளும் சந்தித்தன.
உச்ச நீதிமன்றம் கர்நாடக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழகமுதல்வருக்குத் தான் இந்தக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதாக பலரும் கூறினர். ஆனால்ராஜ்குமார் விடுதவையின் தமிழக முதல்வர் பங்கை யாரும் மறந்து விட முடியாது.
ராஜ்குமார் விடுதலை தொடர்பாக நான் ஐந்து முறை காட்டுக்குச் சென்று வந்தேன்.
முதல் முறை ராஜ்குமார் நலமுடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக வீடியோகேசட் கொண்டு வந்தேன். அதன் பின் கர்நாடக மக்களிடம் பதட்டம் குறைந்தது.ஆனால் தமிழ் மக்களின் பாதுகாப்பு பற்றி பயம் இருந்தது.
தமிழர்களும் கன்னடர்களும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என ராஜ்குமார்வேண்டுகோள் விடுத்தார். இதன் பின்பு கர்நாடக மக்களின் போக்கில் மாறுதல்ஏற்பட்டது. இந்த இரண்டையும் நாங்கள் எங்கள் முதல் பயணத்தின் போது செய்தோம்.
இந்த இரு சாதனையும் தான் 100 நாட்களுக்கு மேலாக ராஜ்குமார் விடுவிக்கப்படாமல்இருந்த போது மக்கள் அமைதி காத்ததற்கு காரணமாகும். இதை நாங்கள் பெரும்சாதனையாக கருதுகிறோம்.
ஐந்து முறை காட்டுக்குச் சென்று வீரப்பன் கோபத்தைத் தணிக்க செயல்பட்டோம்.ராஜ்குமார் விடுதலை செய்ய இருந்தநேரத்தில் உதவி டைரக்டர் நாகப்பா தப்பிவந்ததால் சிக்கல் ஏற்பட்டு அவர் விடுதலை தாமதமானது.
நெடுமாறன் உட்பட 4 பேரை காட்டுக்கு அனுப்பி வைத்தால் அவர்களுடன் சுமுகமாகபேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் என வீரப்பன் கூறியதன் பேரில்,அவர்களுடன் காட்டிற்கு சென்று நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கோவிந்தராஜைமீட்டு வந்தோம்.
கடைசி கட்டமாக கடந்த 14-ம் தேதி ஈரோடு சென்றோம். சிறிது நேரத்திலேயேராஜ்குமார் விடுவிக்கப்பட்டு விட்டதாக செய்தி வந்தது. ராஜ்குமார் விடுவித்தநேரத்தில் நாங்கள் அங்கு இல்லை என்ற வருத்தம் இருந்தாலும், எதற்காக மூன்றுமாதம் பாடுபட்டோமோ அந்த வெற்றி எங்கள் சோகத்தை மறந்து மகிழ வைத்தது.
வெற்றி பெற்று தந்த நெடுமாறன் குழுவினருக்கும, இரு மாநில முத்லவர்களுக்கும்நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். தனிப்பட்ட முறையில் நடிகர் ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட முயற்சிக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் கோபால் கூறியுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications