அதிகாரிகள் குழப்பம் ..விமானத்தை ஓட்ட மறுத்த விமானிகள்
சென்னை:
விமான நிலைய அதிகாரிகளின் குளறுபடிகள் காரணமாக சென்னையில் இருந்து மும்பை செல்லும் இந்தியன்ஏர்லைன்ஸ் விமானத்தை ஓட்ட விமானி மறுத்து விட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வெள்ளிக் கிழமைமாலை 6.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் 200 பயணிகள் இருந்தனர்.
விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் "சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த விமானம் புறப்படுவதற்குதாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. சரியான காரணம் புரியாமல் பயணிகள் விமானத்தை விட்டு கீழேஇறங்கினர். பின்னர் விமான நிலைய அதிகாரிகள் இந்த விமானம் இரவு 9.45 மணிக்கு புறப்படும் என்றனர்.
வழக்கமாக விமானம் புறப்படுவதற்கு முன்னர் துணை கேப்டனிடம் ஒரு பெட்டி கொடுக்கப்படும். அதில்லைசென்ஸ், விமானத்தை பற்றிய தொழில்நுட்ப தகவல்கள், செல்ல வேண்டிய இடம், அதற்கான தூரம், விமானபாதை பற்றிய வரைபடம் போன்ற முக்கியமான ஆவணங்கள் இருக்கும்.
மும்பை விமானத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய அந்த கறுப்பு பெட்டியை தவறுதலாக டெல்லி செல்லும்விமானத்திடம் கொடுத்து அனுப்பி விட்டனர் அதிகாரிகள். இதனால் வந்த குழப்பம் காரணமாக மும்பைவிமானத்தை இயக்க விமானிகள் மறுத்து விட்டனர்.
பின்னர் வேறு ஒரு விமானியை சரிக்கட்டி அவர் தயவில் அந்த விமானம் இரவு 10 மணியளவில் மும்பைசென்றது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications