காஷ்மீரில் 11 தீவிரவாதிகள் சாவு; 4 தீவிரவாதிகள் சரண்
ஸ்ரீநகர்:
கடந்த 24 மணி நேரத்தில் காஷ்மீரில் 9 தீவிரவாதிகள் உட்பட 11 பேர்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பல சம்பவங்களில 11 பேர்கொல்லப்பட்டனர். இதில் 9 தீவிரவாதிகளும் ஒரு பெண்ணும் அடங்குவர். 4தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர்.
ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துத் தெரிவிக்கையில், தீவிரவாதிகள்வெள்ளிக்கிழமை பின்னிரவில் வடக்கு காஷ்மீரில் சிறப்பு காவல் துறை அதிகாரிஉட்பட இரண்டு பேரை கடத்திச் சென்றனர்.
சோனாவுல்லா வானி என்ற தீவிரவாதி ஒருவர் பாரமுல்லா மாவட்டத்திற்கு அருகேஉள்ள நல்லாகுன்சார் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இரவு ராணுவ வீரர்களால்கொல்லப்பட்டார்.
காலாமன்டா என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையேநடைபெற்ற சண்டையில் ஒரு பெண் கொல்லப்பட்டார்.
நான்கு தீவிரவாதிகள் 4 ஏகே துப்பாக்கிகள், 12 சுற்று துப்பாக்கிக் குண்டுகள், 355ரவுண்டு குண்டுகள், 3 துப்பாக்கிகள். 3 வயர்லெஸ் கருவிகள் மற்றும் 2 ராக்கெட்லான்ச்சர்களுடன் பாட்காம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை மாலை ராணுவத்திடம்சரணடைந்தனர் என தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications