குரங்கின் மூளையால் இயங்கும் ரோபோட்...

Subscribe to Oneindia Tamil

நார்த் கரோலினா:

ரோபோட்களுக்கு மனித மூளையைப் பொறுத்தும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

சமீபத்தில் குரங்கின் மூளையைப் பயன்படுத்தி ஒரு ரோபோட்டை இயக்கிக் காட்டியுள்ளது அமெரிக்கப்பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவர். குரங்கின் மூளையில் இருந்து வெளியாகும் மின் அதிர்வுகளை ரோபோட்டில்செலுத்தி அதை இயங்கச் செய்திருக்கிறார் இந்த பிரம்மா.

நார்த் கரோலினாவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் மூளை-நரம்பியல் விஞ்ஞானியான டாக்டர் மைகேல்நிக்கோலிஸ் தான் இந்த சாதனையைப் படைத்திருக்கிறார்.

பிரிட்டனின் அறிவியல் இதழான நேச்சரில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையில் இந்த விவரம்வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்தைக் குரங்கு என்ற ஒருவகைக் குரங்கை இதற்குப் பயன்படுத்தியுள்ளார் நிக்கோலிஸ். குரங்கின் மூளையில்உள்ள கார்ட்டெக்ஸ் பகுதியில் 32 மிக மெல்லிய கேபிள்களைச் செருகி அவற்றை கம்ப்யூட்டருடன் இணைத்தார்.உடலின் தசைப் பகுதியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி தான் கார்ட்டெக்ஸ்.

பின்னர் மற்றொரு குரங்கில் 96 இடங்களில் எலெக்ரோட்களை ஒட்டினார்.

இதன் மூலம் குரங்கின் தசைகளின் செயல்பாட்டை மூளையின் மின் அதிர்வுகள் எப்படிக் கட்டுப்படுத்துகின்றனஎன்பதை ஆராய்ந்தார். பல்வேறு குரங்குகளில் பல்வேறு முறை இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

கேபிள்களை மூளையின் பிற இடங்களில் செருகியும், எலெக்ட்ரோடுகளை மாற்றி வைத்தும் இவர் நடத்தியசோதனையில் மூளையின் எந்த மின் அதிர்வு உடலின் எந்தப் பகுதியை எப்படிக் கட்டுப்படுத்துகிறது என்பதைகண்டறிந்தார். கம்ப்யூட்டர் உதவியுடன் மூளையின் செயல்பாட்டை ஆராந்தார்.

பின்னர் குரங்கின் மூளையோடு ஒரு செற்கைக் கையை கம்ப்யூட்டர் மூலமாக இணைத்தார். மூளையிலிருந்துகிளம்பும் மின் அதிர்வு தான் குரங்கின் உடலின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துகிறது. குரங்கு கையைஅசைக்க வேண்டுமானால் அதற்கும் மூளையிலிருந்து ஒரு மின் அதிர்வு கிளம்பும்.

மூளையின் இந்த மின் அதிர்வை செயற்கை கையில் (ரோபோட்) செலுத்தியபோது குரங்கின் உண்மையான கைஎப்படி அசைந்ததோ அதே போலவே இந்த செயற்கைக் கையும் அசைந்தது.

தனது சோதனையை உறுதிப்படுத்துவதற்காக தான் சேகரித்த முழு அறிவியல் தகவலையும் (டேட்டா) இண்டர்நெட்மூலம் 1,000 கி.மீ. தொலைவில் உள்ள மசாசூசெட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜிக்கு அனுப்பினார். அங்கும்ஒரு ரோபோவுக்கு இந்த மின் அதிர்வுகள் செலுத்தப்பட்டன.

டியூக் நகரில் குரங்கு எப்படி கையை அசைத்தோ அதே போலவே மசாசூசெட்சிலிருந்த ரோபாவும் கையைைஅசைத்தது. இந்த ரியல் டைம் சோதனை மூலம் மாபெரும் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

இப்போது கம்ப்யூட்டருக்குப் பதில் சிறிய சிப்பிலேயே முழுக் கட்டுப்பாட்டையும் கொண்டு வரும் முயற்சியில்இறங்கியிருக்கிறார் நிக்கோலிஸ். மேலும் மூளையிலிருந்து வரும் தகவல்களைப் பெறுவது போலவே திரும்பமூளைக்கு செயற்கையாக தகவல்களை (மின் அதிர்வுகளை) இந்த ரோபோக்கள் மூலம் அனுப்பும் ஆராய்ச்சியிலும்ஈடுபட்டுள்ளார்.

இந்த சோதனைகள் மனிதர்களிலும் வெற்றி பெற்றால், பிற்காலத்தில் செயற்கைக் கை, கால்களைக் கூட நம்மூளையின் உதவியுடன் இயற்கையான கைகள் போலவே நம்மால் பயன்படுத்த முடியும்.

கை, கால் செயல்படாதவர்கள் கூட ரோபோவை தங்களது சிந்தனையால் (மூளையால்) இயக்க முடியும்.

கையின் உதவி இல்லாமலேயே மூளையின் மின் அதிர்வுகளைப் பயன்படுத்தி கம்ப்யூட்டரில் கர்சரை நகர்த்தும்தொழில்நுட்பத்தை ஏற்கனவே ஜெர்மனியின் டியூபிங்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவர்கண்டறிந்துள்ளார்.

இது தவிர மூளைக்குள் செருகப்படும் எலெக்ரோடுகளுக்கு உள்ளேயும் மூளை செல்களை வளர வைத்தும்(மண்ணில் வேர் நுழைவது போல) சாதனை படைக்கப்பட்டிருக்கிறது. அட்லாண்டாவின் எமோரிபல்கலைக்கழகத்தில் இந்தச் சாதனை படைக்கப்பட்டிருக்கிறது.

கை-கால் செயல்படாத 3 நேயாளிகளின் மூளையின் கார்டெக்சில் இந்த எலெக்ரோடுகள் செருகப்பட்டன. சிலரசாயனங்களின் உதவியுடன் மூளையின் கார்டெக்ஸ் நரம்பு செல்கள் இந்த எலெக்டோடுகளுக்கு உள்ளேயும்வளரச் செய்யப்பட்டன.

இந்த எலெக்ரோடுகள் கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் இந்த நோயாளிகள் தங்கள் சிந்தனைமூலமே கம்ப்யூட்டருக்கு தகவல் அனுப்ப முடிந்தது. கம்ப்யூட்டரின் கர்சரை தங்கள் சிந்தனை (மூளையின் மின்அதிர்வுகள்) மூலமே நகர்த்தி தங்களுக்கு என்ன தேவை என்பதையும் பிறர்க்கு சொல்ல முடிந்தது.

மூளையின் அதிர்வுகைளக் கொண்டு ரோபோக்களை இயங்கச் செய்யும் முயற்சிகள் 1970லேயேதொடங்கிவிட்டன. இப்போது தான் மிகப் பெரிய சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+