எம்.எல்.ஏயைத் தாக்கிய 14 பேர் கைது
ஊட்டி:
ஊட்டி எம்.எல்.ஏ., குண்டனைத் தாக்கிய வழக்கில் 14 பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு த.மா.கா.,வும், அ.தி.மு .க.,வும் தான் காரணம் என குண்டன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊட்டி எம்.எல்.ஏ., குண்டன் பொதுமக்களைச் சந்திக்க பல்வேறு இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்தார். மீக்கேரி என்ற கிராமத்தில் பயணம் செய்துவிட்ட மணியட்டி என்ற இடத்திற்கு காட்டுப் பாதையில் நடந்து சென்றார். அவர் திரும்பி வரும்போது நீலகிரித் தேயிலை பிரச்னை குறித்து ஒரு கும்பல்கேள்வி எழுப்பி, குண்டனை சரமாரியாகத் தாக்கியது. இந்த தாக்குதலில் சட்டை பேன்ட் கிழிந்து காலில் ரத்தம் ஒழுக ஓடி வந்தார் எம்.எல்.ஏ.
ஊட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குண்டன், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தன் மீது நடந்த தாக்குதலுக்கு அ.தி.மு.க.,வும், தமிழ் மாநிலகாங்கிரசும் தான் காரணம் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
இப் பிரச்னை குறித்து ஊட்டி தி.மு.க செயற்குழுக் கூட்டம் கூடி கண்டனம் தெரிவித்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்து ஊட்டி மற்றும் நீலகிரியில்ஞாயிற்றுக்கிழமை கடை அடைப்பு நடத்தவும் தீர்மானித்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இது வரை 14 பேரைக் கைதுசெய்துள்ளனர்.
இதில், மணியட்டியைச் சேர்ந்த குமார், நேரு, அய்யாக்குமார், சந்திரன், சுகுமாறன், கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி ஆகியோரை நவ.17ம் தேதி கைது செய்தனர்.தி.மு.க செயற்குழுத் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, மேலும் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications