ராஜ்குமார் விடுதலை: விவரம் கேட்கிறார் வக்கீல்
டெல்லி:
கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக, தமிழக கர்நாடக அரசுகளுக்கும், வீரப்பனுக்கும் ஏதாவது ரகசிய ஒப்பந்தம்ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞர் திங்கள்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் மனுசெய்துள்ளார்.
கடந்த ஜூலை 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டார். 108 நாட்களுக்குப்பின் நடிகர் ராஜ்குமாரை வீரப்பன்விடுவித்துள்ளார். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் மூத்த வழக்கறிஞர் வதேரா, பொதுநலன் கருதி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், வீரப்பன், 10 நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரினார். அவற்றில் மைசூர் ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ள 56 தடா கைதிகள் விடுதலை மற்றும் தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலை ஆகியவை முக்கியநிபந்தனைகளாகும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக, கர்நாடக அரசுகள் ஒப்புக் கொண்ட போதிலும், சுப்ரீம் கோர்ட் தடா கைதிகள் விடுதலையை நிறுத்திவைத்தது. ஏனெனில் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ. ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம், தடா கைதிகள் விடுதலையைஎதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தடா கைதிகள் விடுதலைக்குத் தடை விதித்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் வீரப்பன், நடிகர்ராஜ்குமாரை விடுவித்துள்ளார். தன்னுடைய நிபந்தனைகள் எதுவும் நிறைவேறாத நிலையில் வீரப்பன் எப்படி ராஜ்குமாரை விடுவித்திருக்க முடியும்?
இதனால் தமிழக, கர்நாடக அரசுகளுக்கும் வீரப்பனுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் பேரம் அல்லது ரகசிய ஒப்பந்தம் ஏதாவதுஏற்பட்டிருக்கலாம். இது உண்மையாக இருக்கக் கூடும் என்று நான் நம்புகிறேன். இல்லாவிடில் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரை விடுவித்திருக்க முடியாது.
ராஜ்குமார் விடுதலையில், தூதர் நெடுமாறன் மூலம், தமிழக, கர்நாடக அரசுகளுக்கும், வீரப்பனுக்கும் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டிருக்கலாம்.உடன்பாடு ஏற்பட்டாலன்றி ராஜ்குமார் விடுதலையடைந்திருக்க மாட்டார்.
ராஜ்குமார் விடுதலையில் ஏதாவது பேரம் நடந்திருக்கிறதா என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவு 9ன் படிராஜ்குமார் விடுதலையடைந்தது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வது அடிப்படை உரிமையாகும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் வதேரா.
மேலும் இந்த மனுவை, தமிழக, கர்நாடக மாநில தலைமைச் செயலாளர்கள், மத்திய அமைச்சரவை செயலாளர், இரு மாநில கவர்னர்கள், ஜனாதிபதிகே.ஆர்.நாராயணன் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications