வீரப்பனைப் பிடிக்க 7 பிரிவுகளாக அதிரடிப்படை
ஈரோடு:
கடந்த 10 ஆண்டுகளாக அரசுக்கு சவால் விட்டு வரும் "மாயாவி வீரப்பனைப் பிடிக்க அதிரடிப்படையினர் காட்டுக்குள் சென்று செவ்வாய்க்கிழமைதீவிர வேட்டையைத் துவக்குகின்றனர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்ற வீரப்பனின் செயலலால் கர்நாடகம் மற்றும் தமிழக அரசுகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. உச்சநீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளும், இனி இது போன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்ற நிலையும், அரசின் கவனத்தை வீரப்பனின் பக்கம்தீவிரமாகத் திருப்பியுள்ளது.
இந்த கவன ஈர்ப்பால் தமிழகம் முழுவதிலும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் பணியாற்றும் இளம் வீரர்களைக் கொண்ட அதிரடிப்படையை அரசுஉருவாக்கி வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே வீரப்பனைப் பிடிக்க முகாமிட்டுள்ள அதிரடிப்படையினர் இப்போது காட்டுக்குள் புகுந்துள்ளனர்.
காட்டுக்குள் அதிரடிப்படையை எப்படி அனுப்புவது என்பது குறித்து அதிரடிப்படையின் தலைவர் தமிழ்ச் செல்வன், ஈரோடு எஸ். பி., அசோக்குமார் தாஸ்,மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி பாலச்சந்திரன் ஆகியோர் உள்பட திங்களன்று மாலையில் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில் அதிரடிப்படையில் 7 பிரிவுகளை உருவாக்கியுள்ளனர். இந்த ஏழு படைப் பிரிவுகளும் பல்வேறு பகுதிகளில் நுழைந்துள்ளனர். இவர்கள் அனைவரும்வீரப்பனைச் சுற்றி வளைக்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.
அதே சமயம் , வீரப்பனும் அதிரடி திட்டம் ஒன்றைத் தயாரித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. காட்டுப் பகுதியை ஒட்டியுள்ள கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனைத்தாக்கி அங்குள்ள ஆயுதங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.
இதனால், கொளத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகுந்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு நவீன ஆயுதங்கள் ஏந்திய போலீசார் 24 மணி நேரம் விழிப்புடன்செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், அதிரடிப் போலீசார் காட்டுக்குள் நுழைந்திருப்பதை அறிந்தால் வீரப்பன் தப்பி ஓடக் கூடும் என எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு வீரப்பன்,கர்நாடக மாநிலத்திற்குள் நுழையவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் கர்நாடக மாநல அரசு, வீரப்பனைப் பிடிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.இருந்தபோதிலும், செவ்வாய்க்கிழமை கர்நாடக சட்டசபைக் கூட்டத்தில் இது குறித்து மாநில முதல்வர் அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது .
இரு மாநில அதிரடிப் படையினரும் இணைந்து செயல்பட்டால் வீரப்பனின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது எளிதான காரியமாகும்.
அதே சமயம் தேடுதல் வேட்டைக்கு அரசு மத்திய அரசின் நவீன கண்காணிப்பு கருவிகளைக் கோரி பெறுவது அவசியம் என போலீஸ் அதிகாரிகள்கருதுகின்றனர். எனவே கூட்டு முயற்சியால் தான் எதையும் வெல்ல முடியும் என இவர்கள் கருதுகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications