டிராவிட் இரட்டை சதம்: ஜிம்பாப்வேயை வெல்லுமா இந்தியா?
டெல்லி:
ஜிம்பாப்வே அணியுடனான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவலுவான நிலையில் உள்ளது. ராகுல் டிராவிட் இரட்டை சதம் அடித்தார்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஸ் ஷாகோட்லா மைதானத்தில், நடந்து வருகிறது. நான்காவது நாளான செவ்வாய்க்கிழமைஇந்தியா தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 458 ரன்கள் எடுத்துமுடித்துக் கொண்டது.
ராகுல் டிராவிட் 200 ரன்களைக் குவித்ததும், டெண்டுல்கர் 122 ரன்களை எடுத்ததுமேநான்காவது நாள் ஆட்டத்தின் முக்கிய அம்சம். 458 ரன்கள் எடுத்து, ஜிம்பாப்வேயைவிட கூடுதலாக 36 ரன்கள் சேர்த்த நிலையில், இந்தியா தனது இன்னிங்ஸை டிக்ளேர்செய்வதாக அறிவித்தது.
பின்னர் ஜிம்பாப்வே தனது 2-வது இன்னிங்ஸைத் துவக்கியது. வெடிப்புகள் விழத்துவங்கி விட்ட பிட்ச்சின் போக்கை இந்திய பந்துவீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீநாத் துவக்கத்திலேயே அடுத்தடுத்து 3விக்கெட்டுகளை சாய்த்து, ஜிம்பாப்வேயை தடுமாற்றத்தில் ஆழ்த்தினார்.
முதல் ஓவரின் 2-வது பந்திலேயே கிரான்ட் பிளவரை ஆட்டமிழக்கச் செய்தார் ஸ்ரீநாத்.இரண்டு இன்னிங்ஸிலும் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டமிழந்தார் கிரான்ட்.
2-வது விக்கெட் 15 ரன்கள் எடுத்திருந்தபோது பறிபோனது. இப்போது போனவர்கெவின் ரெனி. ஸ்ரீநாத்தின் பந்தில், கங்குலியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
10 ரன்கள் போன நிலையில் ஆலிஸ்டர் கேம்பல் 8 ரன்கள் எடுத்த நிலையில், ஸ்ரீநாத்பந்தில் சிவ் சுந்தர் தாஸிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்தார் சுனில் ஜோஷி. நிதானமாக ரன்களைச் சேர்த்துக் கொண்டிருந்த,கர்லிஸ்லியை வெளியேற்றினார். அவர் எடுத்தது 32 ரன்கள்.
தமிழகத்தின் முரளி கார்த்திக் தனது முதலாவது டெஸ்ட் விக்கெட்டை பெற்றார்.அவருக்குக் கிடைத்தது கய் விட்டால். மற்றொரு தமிழக வீரர் ரமேஷிடம் பிடிகொடுத்துஆட்டமிழந்தார் கய்.
ஆட்ட நேர இறுதியில் 119 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றமானநிலையில் இருந்தது ஜிம்பாப்வே.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications