கர்நாடக அதிரடிப்படைத் தலைவர் - பின்னணி
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கர்நாடக சிறப்பு அதிரடிப் படையின் புதிய தலைவர்சாங்க்லியானா, கர்நாடகத்தின் வட மாவட்டங்களில் இருந்த சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டுஅடக்கியவர்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்தவர் சாங்க்லியானா (வயது 57). 1967 ம் ஆண்டு போலீஸ் பணியைத்துவக்கினார். முதலில் கர்நாடக மாநிலம் சாகர் மாவட்டத்தில் எஸ்.பியாக வாழ்க்கையைத் துவக்கினார்.
ஷிமோகா, குல்பர்கா, சிக்மகளூர் ஆகிய மாவட்டங்களில் எஸ்.பியாக இருந்துள்ளார். இந்த மூன்றுமாவட்டங்களிலும் எஸ்.பி.யாக பணியாற்றியபோது, சமூக விரோதிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கி,பொதுமக்களின் பயத்தை அகற்றியவர்.
1970-ல் முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சிக்மகளூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட போதுசிக்மகளூரில் எஸ்.பி.யாக இருந்த சாங்க்லியானா, பாதுகாப்புப் பணிகளை மிகவும் சிறப்பாக மேற்கொண்டார்.
பெங்களூரில் துணைப் போலீஸ் கமிஷனராக இருந்த போது, போக்குவரத்து சீர்கேடுகளை முற்றிலுமாக நீக்கி, பலமாற்றங்கள் கொண்டு வந்தார். இவரை அடிப்படையாக வைத்து கன்னடத்தில் 2 திரைப்படங்களும்தயாரிக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவராதலால், காடுகள் குறித்து சாங்க்லியானாவுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்பதால்அதிரடிப்படைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும், வீரப்பன் ஒளிந்துள்ள 6000 சதுர அடிபுரப்பளவுள்ள காட்டுப் பகுதி குறித்து அவர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கும்.
சில வருடங்களுக்கு முன்பு மணிப்பூரில் தீவிரவாதம் தலைவிரித்தாடியபோது, தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தஅமைக்கப்பட்ட, மணிப்பூர் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் சில காலம் பணியாற்றினார்.
ஓய்வு பெற இன்னும் 2 ஆண்டு காலமே உள்ள சாங்க்லியானா தற்போது, கர்நாடக ரிசர்வ் போலீஸ் கூடுதல்டிஜிபியாக இருக்கிறார். தற்போதைய தலைவர் ஹர்ஷவர்த்தன ராஜுவுக்குப் பதில் சாங்க்லியானாநியமிக்கப்பட்டுள்ளார். அதிரடிப்படைப் பணிக்கு சாங்க்லியானா வருவது இதுவே முதல் முறை.
நியமனத்திற்குப் பின் உடனடியாக எம்.எம்.ஹில்ஸ் பகுதிக்கு சாங்க்லியானா விரைந்து விட்டார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications