திமுக அமைச்சர் மீது ஊழல் வழக்கு
சென்னை:
தமிழக கால்நடைத்துறை அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மேல், கால்நடைகளுக்கு மருந்து வாங்கியதில் ரூ 8 கோடி ஊழல் நடந்துள்ளதாக செஷன்ஸ்கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ.சுந்தரம் இவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் சுந்தரம் தொடர்ந்த மனுவில், கால்நடைகளுக்குவாங்கப்பட்ட மருந்து செலவு குறித்த டெண்டர்கள் வாங்குவதில் ஏப்ரல் 1 ம் தேதி முதல் மார்ச் 31 ம் தேதி வரை டெண்டர் விடப்பட்டிருக்க வேண்டும்.
பின்னர் டெண்டரை ஏற்றுக் கொள்ள முன்வந்திருக்கும் நிறுவனங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை குறித்த விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன், ஒப்பந்தம் ஏற்பட்டபின் தேவைப்படும் மருந்துகள் வாங்கப்பட வேண்டும்.
அதற்குப் பின் கால்நடை பிரிவு மண்டல இயக்குநர்கள் தேவையான மருத்துவமனைகள் மற்றும் தேவையான மருந்து வகைகள் குறித்து கூற வேண்டும்.அதற்குப் பின் டெண்டர் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
ஆனால் 1998 மற்றும் 99-ம் ஆண்டுக்கான டெண்டர் மிகவும் தாமதமாக விடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இரு வருடங்களுக்கான டெண்டர் 1999ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் 31 வரை குறுகிய காலத்தில் கோரப்பட்டுள்ளது. இதுகுறித்த அனைத்து நடவடிக்கைகளும் 6 நாட்களுக்குள் நடந்து முடிந்துவிட்டது.
இவ்விஷயத்தில் கால்நடைத்துறை இயக்குநர் லீலாவதியுடன் ஒத்துழைக்கும்படி, கால்நடைத் துறை அமைச்சர் செங்குட்டுவன் மண்டல கூட்டு இயக்குநர்களுக்குஅறிவுறுத்தியுள்ளார். இதில் ரூ 8 கோடி ஊழல் நடந்துள்ளது என்று கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த முதன்மை நீதிபதி அசோக் குமார், மனு மீதான விளக்கத்தை, டிசம்பர் 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications