விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் வாரம் தொடங்கியது
கொழும்பு:
இலங்கையில் ராணுவத்ததுடன் மோதி இறந்த விடுதலைப் புலிகளுக்கு மரியாதை செய்யும் விதத்திலும், பிரபாகரனின் பிறந்தநாளையொட்டியும்செவ்வாய்க்கிழமை மாவீரர்கள் வாரத்தை விடுதலைப் புலிகள் தொடங்கினர்.
மாவீரர் தினத்தையடுத்து நாட்டின் எந்தப் பகுதியிலும், எந்தவிதமான அசம்பாவிதச் சம்பவமும் ஏற்படாதவாறு ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
வரும் ஞாயிற்றுக்கிழமை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 46 வது பிறந்தநாள் விழா வருகிறது. அவரது பிறந்தநாளுடன் புலிகளின்மாவீரர்கள் வாரம் முடிவடைகிறது.
மாவீரர்கள் வாரத்தின் இறுதி நாளில் வழக்கமாக பிரபாகரன் புலிகளின் ரேடியோவில் உரை நிகழ்த்துவார். தற்போது நார்வே தூதுக் குழுவினர்பிரபாகரனைச் சந்தித்துச் சென்றுள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து பிரபாகரன் அறிவிப்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
மாவீரர்கள் வாரத்தின்போது, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வடகிழக்குப் பகுதிகளில் மதச் சடங்குகள், கலாச்சார கண்காட்சிகள்போன்றவற்றை விடுதலைப் புலிகள் மேற்கொள்வர்.
கொழும்பில் 46 மனித வெடிகுண்டுகள்:
இதற்கிடையே, தலைநகர் கொழும்பில் விடுதலைப் புலிகளின் 46 மனித வெடிகுண்டுகள் ஊடுருவியுள்ளதாகத் தகவல்கள் அரசுக்குக் கிடைத்துள்ளன.இதனால் ராணுவம் மற்றும் போலீஸார் உஷார் படுத்தப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கொழும்பு நகரில் புலிகள் யாரேனும் ஊடுருவியுள்ளனரா என்று தேடுவதற்காகத் தனிப் போலீஸ்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் பணியைத் தீவிரமாகச் செய்து வருகிறார்கள் என்றார்.
கடந்த ஆண்டு, வடமேற்கு மாவட்டமான மன்னார் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க சர்ச்சில், மாவீரர் வாரத்தின்போது, புலிகளுக்கும், ராணுவவீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த 37 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொழும்பு நகரில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். இதே போல்அக்டோபர் மாதம் திரிகோணமலை துறைமுகப் பகுதியில் கடற்புலிகள் 6 பேர் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட்டனர். இத்தாக்குதலில்கடற்படைக்குச் சொந்தமான இரண்டு படகுகள் தேசமடைந்தன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications