தாதா சோட்டா ராஜன் தாய்லாந்து மருத்துவமனையிலிருந்து தப்பினான்
பாங்காக்:
தாய்லாந்து மருத்துவ மனையிலிருந்து சோட்டா ராஜன் தப்பித்தார். படுக்கை விரிப்புக்களை கயிறு போல் கட்டி 4 வது மாடியிலிருந்து குதித்துத் தப்பித்து விட்டார்அவர்.
இந்தியாவில் பல கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் சோட்டா ராஜன். இவர் தாய்லாந்து நாட்டுக்குத் தப்பியோடி அங்கு பதுங்கியிருந்தார்.
அப்போது, இவரது கோஷ்டிக்கும், மும்பை தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட தாவூத் இப்ராஹிம் கோஷ்டிக்கும் இடையே மோதல்ஏற்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சண்டையில் சோட்டா ராஜன் காயமடைந்தார்.
இதையடுத்து, அவர் தாய்லாந்து தலைநகர் பாங்காக் சமிட்டிவேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சோட்டாராஜனை இந்தியாவுக்குக் கொண்டு வர போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
பின்னர் அவரை தாய்லாந்து போலீஸார் கைது செய்தனர். போலீஸ் காவலுடன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில்வெள்ளிக்கிழமை காலை சோட்டா ராஜன் தப்பித்து விட்டார். மருத்துவமனையில் தான் தங்கியிருந்த 4 வது மாடியிலிருந்து குதித்துத் தப்பித்து விட்டார்.
இந்தத் தகவலை தாய்லாந்து போலீஸ் அதிகாரி வொராசார்ட் தெரிவித்தார்.
தனக்கு அளிக்கப்பட்டிருந்த பலத்த காவலையும் மீறி சோட்டா ராஜன் தப்பித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சோட்டா ராஜன் அறைக்குள்காவலுக்கு இருந்த 2 அதிகாரிகளும் போதை மருந்து சாப்பிட்டு உள்ளனர்.
எனவே போதை மருந்தைக் கொடுத்து ஏமாற்றி சோட்டா ராஜன் தப்பித்து இருக்கலாம். அல்லது அங்குள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துத்தப்பித்து இருக்கலாம் என்று போலீஸார் நம்புகின்றனர்.
இதையடுத்து சோட்டாராஜனைப் பிடிக்கும் முயற்சியில் தாய்லாந்து போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து செக் போஸ்ட்டுகளிலும் சோட்டாராஜன் படம் வைக்கப்பட்டு பிடிக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக, மும்பையிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications