அதிமுக ஆட்சியே விளையாட்டு வீரர்களின் பொற்காலம் .. ஜெயலலிதா
சென்னை :
அதிமுக ஆட்சிக்கு வந்தால் விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்புகளை வாரி வழங்குவேன் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா திங்கள் கிழமை வெளியிட்ட அறிக்கை:
கருணாநிதி ஆட்சியில் விளையாட்டு துறையிலிருந்து ஒருவருக்கு கூட வேலைவாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த இளம்விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் விளையாட்டுத் துறையில் தமக்குள்ள திறமையின் அடிப்படையில் வேலைவாய்ப்பு தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கின்றனர். அப்படியும் வேலை பெற முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
பல்கலைக்கழக விளையாட்டு வீரராகவும், இளநிலை தேசிய விளையாட்டு வீரராகவும் திகழ்ந்த லயோலா கல்லூரி மாணவர் ஜெயவேல் தற்கொலை இதற்குஒரு உதாரணம்.
விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நான் அளித்து வருகின்ற ஆக்கமும் ஊக்கமும்தான் கருணாநிதிக்கு விளையாட்டுத் துறை என்றாலேஆரம்பத்தில் அலட்சியமாக இருந்தது. இன்றைக்கு வெறுப்பாகவே மாறிவிட்டதற்கும் அதுவே காரணம்.
ரஷ்யாவிலும், மாலத்தீவிலும் இந்திய அரசால் அனுப்பப்பட்ட விளையாட்டு வீரராக, வாலிபால் போட்டிகளில் பங்கேற்ற மிகவும் திறமை வாய்ந்த இளம்விளையாட்டு வீரராக, பட்டதாரியாக இருந்தும் இந்தியாவின் பிரதிநிதியாக சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டவராக இருந்தும் கூடவேலை கிடைக்காததால் ஜீவனத்திற்கு வழியில்லாமல் ஜெயவேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
கடந்த நான்கரை ஆண்டு காலமாக அரசுத்துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வேலை வாய்ப்பு அளிக்காமல் அதற்கானவழிகளையே அடைத்து மூடிவிட்ட கருணாநிதி அரசு தான் இந்த இளைஞரின் சாவுக்கும், இதே காரணத்திற்காக செய்தி வெளியிடப்படாத இன்னும் பலஇளைஞர்களின் மரணங்களுக்கும் பொறுப்பேற்க வேண்டும்.
தற்பொழுது தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையில் இளைஞர்களாக உள்ள ஆண்களும், பெண்களும் விளையாட்டுத்துறையில் தீவிரமாக ஈடுபாடு செலுத்தத்தயங்குகிறார்கள். அதன் காரணமாக இன்று தமிழ்நாட்டின் விளையாட்டுத் தரமே தாழ்ந்து விட்டதைப் பற்றி நான் இங்கே எடுத்துக் கூறவில்லை. ஆனால்மனிதாபிமான அடிப்படையில் தமிழகத்தில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் சோக நாடகத்தைப்பற்றி நான் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
எனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவிலேயே விளையாட்டுத்துறைக்கான மிகச் சிறப்பான கட்டமைப்பை நான் ஏற்படுத்தினேன். நான் உருவாக்கிய கால்பந்து,ஹாக்கி, டென்னிஸ் , நீச்சல் மற்றும் உள்ள விளையாட்டு அரங்கங்களும், தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளுக்கான கிராமம் இன்று வரை இந்தியநாட்டிலேயே உள்ளவற்றில் மிகவும் உயர்ந்த தரம் உள்ளவை என்று கருதப்படுகின்றது.
மேலும் சோலைமதி, அமுதா, குற்றாலீஸ்வரன், ரூபா, பாலாஜி போன்ற எண்ணற்ற இளம் விளையாட்டு வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் பணமுடிப்புகளும், வீடுகளும் வழங்கி அவர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்தேன். அரசு துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகளை நான் உருவாக்கினேன்.
காவல்துறையில் விளையாட்டு வீரர்களுக்கென 10 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முதன் முதலில் அமல்படுத்தினேன். இது இந்தியாவிலேயேவிளையாட்டு வீரர்களுக்கு செய்யப்பட்ட அதிகபட்ச ஒதுக்கீடு. இது பெண்களுக்கும் பொருந்தும் என்பதால் உலகத்திலேயே இதுவே அதிகபட்சமான இடஒதுக்கீடு என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் ஆதரவோடு நான் மீண்டும் ஆட்சிக்கு வரும்போது இத்தகைய விளையாட்டு குழுக்கள் மீண்டும் தொடங்கப்படும். மேலும் எல்லா அரசுநிறுவனங்களிலும் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் இடம் பெறும் விளையாட்டுக் குழுக்கள் நடத்தப்படும். மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தால்மாநில அரசின் கவனிப்பும் ஊக்கமும் இல்லாத காரணத்தால் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தமிழ்நாட்டில் வேலைகிடைக்காததால் வெளிமாநிலங்களுக்குச் சென்று வேலை தேடி அலைய வேண்டிய துர்ப்பாக்கியமான சூழ்நிலையும், தற்கொலை செய்து கொள்ள வேண்டியஅவல நிலையும் அறவே இருக்காது.
ஒவ்வொரு ஆண்டும் அரசு நிறுவனங்களில் குறைந்தபட்சமாக விளையாட்டுத் துறையைச் சேர்ந்த 50 ஆண்களுக்கும், 50 பெண்களுக்கும் வேலைவாய்ப்புஅளிக்கப்படும். மறைந்த வீரர் ஜெயவேலுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எம்.ஜி.ஆர். அறக்கட்டளையிலிருந்து அவரது பெற்றோருக்கு ஒரு லட்சம்ரூபாய் வழங்கப்படும்.
அதேபோல் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட ஜெயலட்சுமி என்ற வீராங்கனையை கருணாநிதிஅரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால், அதிமுக சார்பில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கி கவுரவிக்கப்படும்.
தென்னக ரயில்வேயிலும், ஐ.சி.எப்.லும் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படும் போதிலும், பெரும்பாலான வேலை வாய்ப்புகள்கேரளா மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கே அளிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு, அதாவதுவிளையாட்டு வீராங்கனைகளுக்கு அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க எந்த வழியும் இல்லை.
ஏனென்றால் இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி. போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் ஆண்களுக்கான விளையாட்டுக் குழுக்களை மட்டுமே நடத்தி வருகின்றன. மக்கள்ஆதரவோடு அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் போது தற்போதுள்ள மாநில அரசால் அலட்சியப்படுத்தப்படும் இளம் விளையாட்டு வீரர்கள்,வீராங்கனைகளுக்கு தேவையான ஆக்கமும், ஊக்கமும் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications