அசாருக்கு வாழ் நாள் தடை வருமா?
டெல்லி:
மாதவன் கமிட்டி அறிக்கையில் அசாருதீன் மாட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாகவும் மற்றவீரர்கள் சூதாட்ட ஏஜெண்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்ச் ஃபிக்சிங் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அசாருதீன். அஜய் ஜடேஜா, நயான்மோங்கியா, அஜய் ஷர்மா,மனோஜ் பிரபாகர் ஆகியோர் மீது குற்றம் சுமத்தியிருந்தது.இதை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்னாள் சி.பி.ஐ. இணைஇயக்குனர் மாதவனை நியமித்தது.
குற்றம் சுமத்தப்பட்ட கிரிக்கெட் வீரர்களையும், மருத்துவராக இருந்த அலி ஈரானிமற்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த டெல்லி பெரோஷ்ா கோட்லாவின் மைதானப்பணியாளர் ராம் ஆதர் ஆகியோரையும் விசாரித்து 340 பக்கங்கள் கொண்டஅறிக்கையை கிரிக்கெட் வாரியத்திடம் சமர்பித்தார்.
மாதவன் கமிட்டியின் கருத்துக்களை அறிய விரும்பிய மத்திய விளையாட்டுத்துறைஅமைச்சர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் முத்தையாவைஅழைத்தார்.
உமாபாரதியை சந்தித்தபின் நிருபர்களிடம் முத்தையா கூறுகையில், சி.பி.ஐ. கூறியகுற்றச்சாட்டுகளை மாதவன் அறிக்கையும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
அசாரூதீன் மீது மாட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. மோங்கியா தவிரமற்ற வீரர்கள் கிரிக்கெட் சூதாட்ட ஏஜென்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்துள்ளது. மோங்கியாவுக்கு சூதாட்ட ஏஜென்டுகளுடன் தொடர்பு எதுவும் இல்லை.
அலி ஈரானிக்கும் கிரிக்கெட சூதாட்ட ஏஜென்டுகளுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது.அவர் கிரிக்கெட் வீரர்களுக்கும், சூதாட்ட ஏஜென்டுகளுக்கும் இடையே பாலமாகஇருந்திருக்கிறார். பணமும் இவர் மூலமாகவே கொடுக்கப்பட்டிருக்கிறது என தெரியவந்துள்ளது.
கபில் தேவுக்கு எதிராக சூதாட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.அதே போல் பெரோஷ்ஷா கோட்லா மைதானத்தின் பணியாளர் ராம் ஆதரும் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
தவறு செய்த கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாதவன் பரிந்துரைசெய்துள்ளார்.
29-ம் தேதி கல்கத்தாவில கூடவிருக்கும் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக் குழுகூட்டத்தில் மாதவன் அறிக்கை சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். அதன் பின்அறிக்கை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் என முத்தையா கூறினார்.
அசாருக்கு தண்டனை:
சி.பி.ஐ. மற்றும் மாதவன் கமிட்டியால் மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் அசாருதீனுக்குவாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது.மற்ற வீரர்களுக்கு கடுமையான தண்டனை இருக்காது என தெரிகிறது.
29-ம் தேதி கூடும் ஒழுங்கு நடவடிக்க்ை குழு கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தங்கள் பக்க நியாயத்தைக் கூற வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications