மீண்டும் பிரபலங்களைக் கடத்த வீரப்பன் திட்டம்?
ஈரோடு:
அதிரடிப்படையினரிடமிருந்து தப்பிக்கவும், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், மீண்டும் ஆட்களைக் கடத்த வீரப்பன் திட்டமிட்டுள்ளதாக போலீசாருக்குத்தகவல் கிடைத்துள்ளன. இதையடுத்து முக்கிய வனப்பகுதி அருகே உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலுக்கு பிறகு வீரப்பனைத் தீவிரமாகத் தேடும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வீரப்பன் மீண்டும்ஆட்களைக் கடத்தும் பணியில் ஈடுபடக் கூடும் என தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே கோபிச் செட்டிபாளையம் எம்.பி.காளியப்பன் மற்றும் பவானி எம்.எல்.ஏ., ஆகியோரைக் கடத்த திட்டமிட்டிருப்பதாக வந்ததகவலையடுத்து இவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக சத்தியமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏவும், ம.தி.மு.க பிரமுகருமான சுப்ரமணியம், முன்னாள் பஞ்சாயத்துயூனியன் தலைவர் ராமண்ணா, தாளவடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி வெங்கட்ராமன் ஆகியோரை வீரப்பன் கடத்த திட்டமிட்டுள்ளான் என்றதகவல் ரகசியப் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்துள்ளது.
எனவே இவர்களைப் பாதுகாப்பாக இருக்கும் படி உளவுத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே இரவில் வீட்டில் தூங்காமல் பாதுகாப்பான இடத்தில் இருக்கும்படி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பாதுகாப்புடன் வெளியில் செல்லவும்உத்தரவிட்டுள்ளனர்.
இதுதவிர, கடம்பூர் போலீஸ் ஸ்டேஷனை தாக்கவும் வீரப்பன் திட்டமிட்டுள்ளதால் இந்த போலீஸ் ஸ்டேஷனுக்கும் இயந்திர துப்பாக்கி ஏந்தியஅதிரடிப்படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications