வங்க தேசத்தில் பாக். கொடி எரிப்பு
டாக்கா:
வங்க தேசத்திற்கான பாகிஸ்தானின் துணை தூதர், தற்போதைய ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியியைச் சேர்ந்தவர்கள் தான் 1971-ம் ஆண்டுபோரின் போது நடந்த வன்முறைச் சம்பவங்களுக்குக் காரணம் என கூறியதற்கு வங்க தேசம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
வங்க தேசத்திற்கான பாகிஸ்தானின் துணை தூதர் இஃப்ரான் ராஜா என்பவர் 1971-ம் ஆண்டு போரின் போது நடந்த காட்டு மிராண்டித்தனமானசெயல்களுக்கு கிழக்கு பாகிஸ்தான் காரணமல்ல.
ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் விடுதலைக்காக போரிட்ட அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்களே காரணம் என்று கூறியதற்கு செவ்வாய் கிழமைவங்க தேசம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.
ஜாடியா சாம்டான்டிரிக் தல் கட்சித் தொண்டர்கள் பாகிஸ்தானின் கொடியை நேஷனல் பிரஸ் கிளப்பின் முன் எரித்தனர். வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாஇது குறித்து பாகிஸ்தானின் தூதர் இக்பால் அகமது கானிடம் கூட்டம் ஒன்றில் துணை தூதர் இஃப்ரான் ராஜா கூறிய தவறான குறித்து புகார் செய்துள்ளார்.
வங்க தேசத்தின் வெளிநாட்டுத்துறை அமைச்சர், அப்துல் சமாத் அசாத் ஹைகமிஷனிரிடம் கூறுகையில் , நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். ராஜாகூறியவை வங்க தேசத்தின் பெருமையை சீர்குலைக்கும் விதமாக அமைந்துள்ளது. அவரது இந்த பேச்சு வங்க தேசத்தின் விடுதலை சரித்திரம் குறித்துஎதுவும் தெரியாமல் அவர் பேசியிருக்கிறார்என்பதை காட்டுகிறது.
பாகிஸ்தான் அரசு இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே உள்ள உறவுகள் பாதிக்காத வண்ணம்பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.
ஷேக் ஹசீனா அமைதியை விரும்பி நடவடிக்கை எடுத்து வரும் போது அதை பாதிக்கும் வகையில் இது போன்ற அவதூறான பேசியிருப்பது வருத்தம்அளக்கிறது என்றார்.
டாக்காவிற்கும், இஸ்லமாபாத்திற்கும் இடையாயன உறவு நல்ல விதமான நட்பு முறையில் இல்லை.
ஐக்சிய நாடுகள் சபையின் மில்லினியம் கூட்டம் நியூயார்க்கில் நடந்தபோது ஹசினா அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நாடுகளை பாகிஸ்தான் உள்பட ராணுவஆட்சி நடக்கும் நாடுகளை புறக்கணிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதைத் தொடர்து ஹசினாவுடன் நடத்தவிருந்த சந்திப்பை பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளர் பர்வேஷ் முஷாரப் ரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications