சபரிமலையில் உற்சவபலி பூஜை
பந்தனத்திட்டா:
சபரிமலையின் மண்டல பூஜை திருவிழாவின் 7-வது நாள் உற்சவபலியுடன்துவங்கியது.
கார்த்திகை மாதம் 1-ம் தேதி மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன்சன்னிதானத்தின் நடை திறக்கப்பட்டது. 7-வது நாளான செவ்வாய்கிழமை உற்சவபலிஎன்ற பூஜை நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமுற்றனர்.
ஐயப்பன் சன்னிதானத்தின் 18-ம் படியில் ஏறி ஐயப்பனை தரிசிக்க ஆயிரக்கணக்கானபக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் சொப்பனத்தைஅடையும்வரை காத்திருந்தனர். நெய் அபிஷேகம் காலை 10.30-க்கு நடை பெற்றது.
மேல்சாந்தி சம்பு வாத்யார் நம்பூதிரி ஸ்ரீபலி பிம்பத்ததை அதற்கென சிறப்பாகஅமைக்கப்பட்டிருந்த பீடத்திற்கு எடுத்துச் சென்றார்.
தீபாராதனை முடிந்தவுடன் ஸ்ரீபலி பிம்பம் மீண்டும் திருக் கோவிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
ஆயிரக் கணக்கான பக்தர்கள் உற்சவ பாலியைக் காண சன்னிதானத்தில்திரண்டிருந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 18-ம் படியில் ஏறுவதற்குகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
அத்தாழ பூஜைக்குப் பின் ஸ்ரீ பூதா பலி நடை பெற்றது.ஐயப்பனின் உற்சவர்ஊர்வலமாக அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது எடுத்துச் செல்லப்பட்டார்.
சன்னிதானமும், திருமுட்டமும் ஊர்வலத்தின் போது விளக்குளால்அலங்கரிக்கப்பட்டிருந்தன. நவம்பர் 30-ம் தேதியன்று சரங்குத்திஆவில்பலிவெட்டா நடைபெறும். ஆராட்டு விழா டிசம்பர் மாதம் 1-ம் தேதியன்றுபம்பாவில் நடைபெறும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications