புயல்: 48 தமிழக மீனவர்களைக் காணவில்லை
சென்னை:
சென்னை காசிமேடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் மீன் பிடிக்கச் சென்ற 48 மீனவர்கள் காணாமல் போய்விட்டதாகத் தெரிய வந்துள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த தாழ்வழுத்த மண்டலம் காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை, சூறாவளிக் காற்றுஏற்பட்டது.
இதனால் கடலூர், நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயல் மழையில் சிக்கி இதுவரை 12 பேர்இறந்துள்ளனர்.
புதுவையில் 2 பேர் பலி:
புதுவையில் இரண்டு பேர் பலியானார்கள். 13 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பல குடிசைகள் சரிந்து விழுந்துள்ளன. பலவீனமானகட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன.
இந்நிலையில் அடுத்த 48 மணி நேரங்களுக்கு சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை மற்றும் கடலூரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக தென்னை மரங்கள் அதிக அளவில் முறிந்து விழுந்தன.
மீனவர்களைக் காணவில்லை:
சென்னை காசிமேடு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 48 மீனவர்களை காணவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
கடலூர் மாவட்டத்தில் கலெக்டர் சந்தீப் சக்ஸேனா தலைமையில் நிவாரணப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications