ஹெலிகாப்டர் மூலம் வீரப்பனைத் தேட முடிவு
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிக்க விமானப் படை உதவியை வழங்குகிறோம் என்று மத்திய அரசு கூறியதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டையைத்தீவிரப்படுத்துவது என்று பெங்களூரில் நடந்த போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
கர்நாடக தமிழக அரசுகளுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கி வரும் வீரப்பனைப் பிடித்தே தீருவது என்று இரு மாநில போலீஸ் அதிகாரிகளும் தேடுதல்வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கர்நாடக போலீஸ் அதிகாரிகள் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூர் நிருபதுங்கா ரோட்டில் உள்ள போலீஸ் டிஜிபி அலுவலகத்தில்நடந்தது. இதில் தமிழக ஐஜி பாலச்சந்திரனும் கலந்து கொண்டார்.
கர்நாடக டிஐஜி பேட்டி:
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் தமிழக, கர்நாடக, போலீஸ் அதிகாரிகளுடன்,எல்லைப் பாதுகாப்பு வீரர்களும் சேர்ந்து செயல்படுவார்கள்.
இதற்காக தமிழகத்திலிருந்து 1000 போலீஸாரும், கர்நாடகத்திலிருந்து 1000 போலீஸாரும் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் 1000 பேரும்நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக ஐஜி பாலச்சந்திரன் அதிரடிப்படைக்குத் தலைமை தாங்குவார். மேலும், சங்கர் பிதரி, சாங்கிலியானா ஆகியோரும் இதற்கு இணைத் தலைவர்களாகஇருப்பார்கள்.
புலிகளுடன் வீரப்பன்:
வீரப்பனுடன் விடுதலைப் புலிகள் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவருடன் தமிழ்த் தீவிரவாதிகள் இருக்கிறார்கள். முதலில் சாட்டிலைட்உதவியுடன் வீரப்பனைத் தேடலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் தற்போது மத்திய அரசு விமானப்படை உதவி செய்ய முன்வந்ததைத் தொடர்ந்துஹெலிக்காப்டர் மூலம் வீரப்பனைத் தேடுவது என முடிவு செய்துள்ளது.
வீரப்பனை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கலாம் என்று சட்டம் கூறுகிறது. அதனால் வீரப்பன் விரைவில் பிடிபடுவார் என்றார் தினகர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications