இலங்கை: திசநாயகே துணை நிதி அமைச்சராக பதவி ஏற்பு
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்ற விவாரத்துறை அமைச்சர் திசநாயகே இரன்டாவது துணை நிதி அமைச்சராகபதவி ஏற்றுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் சந்திரிகா குமாரதுங்காவின் அரசுபெரும்பான்மை பெறவில்லை. எம்.பி.க்களை விலை கொடுத்து வாங்கும் செயல்லில் ஈடுபட்டிருந்ததால் அவர்அமைச்சர், துணை அமைச்சர்கள் பெயர்களை வெளியிடாமல் இருந்தார்.
நிதித்துறை மற்றும் திட்டக்குழு அமைச்சகம் இரண்டும் அதிபர் சந்திரிகாவிடம் தான் இருக்கிறது. அவர் தற்போதுஐரோப்பாவில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திசநாயகே இரண்டாவது துணை நிதி அமைச்சராகவும்,திட்டககுழு அமைச்சராகவும் பதவி ஏற்றார்.
இது பற்றி இலங்கை வானொலி தெரிவிக்கையில், திசநாயகே நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன் பதவிஏற்றுக் கொண்டார். இந்த கூட்டத் தொடரில் 2001-ம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான தற்காலிக நிதிநிலைஅறிக்கை சமர்பிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications