கூட்டணிக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம்
சேலம்:
எங்கள் கருத்தைச் சொல்வோமே தவிர, கூட்டணிக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்இளங்கோவன் தெரிவித்தார்.
சேலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம். அதே சமயம், நடைமுறைக்கு எத்தகைய ஆட்சி சாத்தியமோ அதைத் தான் நாங்கள்ஏற்றுக் கொள்வோம்.
எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டாலும் எங்களது கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவிக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கூட்டணிக்கட்சிகளுக்கு நிபந்தனை விதிக்க மாட்டோம். இதில், காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க விற்கு இடையே எவ்வித பிரச்னையும் இருக்காது.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இருக்காது என்றே கருதுகிறேன். ஆனால், தேர்தல் வரும்போது எப்படி வேண்டுமானாலும் மாறவாய்ப்பு உள்ளது. இதனை யூகத்தின் அடிப்படையில் இப்போதே தீர்மானிக்க முடியாது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் காங்கிரசும் இணைந்து மூன்றாவதுஅணி அமைக்கப் போவதாகக் கூறுவது வெறும் யூகங்களின் அடிப்படையில் வெளியாகும் செய்திகளே.
பாட்டாளி மக்கள் கட்சி பிரிந்து செல்வதை கருணாநிதி விரும்பவில்லை. எனவே கருணாநிதி இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்துஎவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
சண்டிகரில் நடந்த ரயில் விபத்திற்கு முழுப் பொறுப்பேற்று மம்தா பானர்ஜி ராஜினமா செய்தார். இந்த ராஜினமாவை ஏற்றுக் கொண்டதாக பிரதமர்அறிவித்தார்.
ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் இதற்கு மறுப்புத் தெரிவித்து பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டது. தான் என்ன பேசுகின்றோம் என்பதைஅறியாதவர் பிரதமாராக நீடிக்கக் கூடாது. உடனே ராஜினமா செய்ய வேண்டும்.
அரியலூரில் ரயில் விபத்து நடந்தபோது அமைச்சர்களாக இருந்த அழகேசன் ராஜினமா செய்ய வேண்டும் என அப்போது கருணாநிதி கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்று அழகேசன் மத்திய அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். இப்போது கருணாநிதி, மம்தா பானர்ஜி ராஜினமா செய்ய கோரிக்கைவிடுப்பாரா?
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரை சோனியா காந்தி விரைவில் அறிவிப்பார் என்றார் இளங்கோவன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications