சத்தியமங்கலத்தில் மினாரை சேதப்படுத்தய 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

சத்தியமங்கலம் பகுதியில் மினார் சேதப்படுத்தியது தொடர்பாக இந்து முன்னணியினரைப் போலீசார் கைதுசெய்தனர். இதையடுத்து அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காகப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சத்தியமங்கலத்தில் ஈத்கா தொழுகை மைதானத்தில் இருந்த 5 மினார்களில் இரண்டு மினார்களின் கோபுரங்களையாரோ சிலர் கடந்த டிசம்பர் 6ம் தேதி சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து ஜமாத் தைச் சேர்ந்தவர்களும் முஸ்லிம்பிரிவினரும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாகக் கண்டுபிடித்து நடவடிக்கைஎடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இரண்டு நாட்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், மினார் சேதப்படுத்தப்பட்ட சம்பவம்தொடர்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த சிலரைப் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் காம்பிகை மணி இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.முழுமையாக விசாரணை செய்யாமல், மினார்களை யார் சேதப்படுத்தியவர்கள் என்பதை ஆராயமல்தன்னிச்சையாக போலீசார் இந்து முன்னணியினரைக் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத் தக்கது. உண்மைநிலவரத்தைக் கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

மேலும், அவர் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதற்கு போலீசார்அனுமதிக்க மறுத்து விட்டனர். இதையடுத்து சத்தியமங்கலத்தில் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+