கிரிக்கெட்: ஜிம்பாப்வேயிடம் இந்தியா தோல்வி
ஜோத்பூர்:
இந்திய - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் விளையாட்டு போட்டி ஜோத்பூரில்வெள்ளிக்கிழமை நடந்தது. பரபரப்பான இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
மொத்தம் 5 தொடர்கள் கொண்ட போட்டியில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 2- 0 என்றுமுன்னணியில் இருந்தது.
வெள்ளிக்கிழமை நடந்த 3-வது போட்டியில் ஜிம்பாப்வே 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது.
டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அணித் தலைவர் கங்குலியும்,டெண்டுல்கரும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
ஆனால் கங்குலி விரைவிலேயே ஆட்டமிழந்து விட்டார். அவர் ஆட்டமிழந்த போது அணியின் எண்ணிக்கை 22.
அதன் பின் டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்தார் ராகுல் டிராவிட். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடினர்.டெண்டுல்கர் தனது அதிரடி ஆட்டத்தால் மளமளவென ரன்களை குவித்தார்.
அணியின் எண்ணிக்கை 136 ஆக இருந்த போது டிராவிட் ஆட்டமிழந்தார். அவர் 30 ரன்கள் எடுத்தார்.அதன்பிறகு விக்கெட்டுகள் சரிய ஆரம்பித்தன. ஆனால் டெண்டுல்கர் சிறப்பாக ஆடி 146 ரன்கள் குவித்தார்.
இறுதியில் வந்த ஜாகீர் கான் 33 ரன்கள் எடுத்தார். அவர் 11 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். அவர் 4 சிக்ஸர்கள்அடித்தார்.
இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்தன.
ஜிம்பாப்வேயின் தரப்பில் பி.ஸ்டிராங் 37 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். எச்.ஸ்டீரீக் 54ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கிரான்ட ஃப்ளாவர் 42 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைகைப்பற்றினார்.
இதன் பின்பு 284 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது.
துவக்கத்திலிருந்தே ஜிம்பாப்வே விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 52 ரன்களைஎன்ற நிலையில் ஜிம்பாப்வே தடுமாறிக் கொண்டிருந்தது.
ஆனால் அதன் பின் கிரான்ட் ஃப்ளாவரும், ஆன்டி ஃப்ளாவரும் சிறப்பாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 210ரன்னாக இருந்த போது கிரான்ட் ஃப்ளாவர் ஆட்டமிழந்தார். அவர் 70 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆன்டி ஃப்ளாவர் 77 ரன் கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 214. அப்போதுமொத்தம் 42 ஓவர்கள் முடிந்திருந்தன.
தொடர்ந்து பரபரப்பாக நடை பெற்ற ஆட்டத்தில் 49.3 ஓவர்களில் ஜிம்பாப்வே 8 விக்கெட்டுகளை இழந்து 283ரன்கள் எடுத்தது. இதனால் இரு அணிகளும் சமமான நிலையில் இருந்தன். 3 பந்துகளில் 1 ரன் எடுத்தால்ஜிம்பாப்வே வெற்றி பெறும் என்ற நிலை. இரண்டு விக்கெட்டுகள் ரன் கொடுக்காமல் வீழ்த்தி விட்டால் ஆட்டம்சமனாகி டை ஆகிவிடும் நிலை.
பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த பந்திலேயே அஜீத் அகார்கர் மற்றொருவிக்கெட்டை வீழ்த்தி பரபரப்பை அதிகப்படுத்தினார்.
2 பந்துகளில் 1 ரன் எடுத்தால் ஜிம்பாப்வே வெற்றி. இரண்டுபந்துகளில் 1 விக்கெட்டை எடுத்தால் இந்தியா வெற்றி.ரசிகர்கள் இதயம் படபடக்க இந்திய வெற்றிக்காக வீரர்களை ஊக்குவிக்க கரகோஷமிட்டனர்.
அஜீத்அகார்கர் பந்து வீச ஓடிவர தாளகதியுடன் ரசிகர்கள் கரகோஷமிட்டு அவரை ஊக்குவித்தனர். ஆனால்ஜிம்பாப்வே அணி வீரர் ஓலாங்கோ அந்த பந்தை லாவகமாக 1 ரன்னுக்கு தட்டி இந்தியாவிடமிருந்து வெற்றிக்கனியையும் தட்டிச் சென்றார்.
49.5 ஓவர்களில் ஜிம்பாப்வே 9 விக்கெட்டுகள் இழந்து 284 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற நிலையில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
அடுத்து வரும் போட்டிகள் மிக பரபரப்பாக எதிர் பார்க்கப்படுகின்றன.
இந்திய தரப்பில் ஜாகீர் கான் 10 ஓவர்களில் 47 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.வெங்கடேஷ்பிரசாத் 10 ஓவர்களில் 60 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அஜீத் அகார்கர் 9.5 ஓவர்களில் 46 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.சுனில் ஜோஷி 10 ஒவர்களில்58 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.டெண்டுல்கர் 6 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து 1விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்த ஆட்டத்தின் சிறந்த ஆட்டக்காரராக கிரான்ட் ஃப்ளாவர் அறிவிக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications