அரசு ஊழியரை தாக்கிய முனிசிபல் சேர்மன் கைது
திருப்பூர்:
தி.மு.க.வைச் சேர்ந்த முனிசிபல் சேர்மன், பணியிலிருந்த அரசு ஊழியரை அவரது வேலையைச் செய்யவிடாமல் தடுத்ததற்காக கைது செய்யப்பட்டுவெள்ளிக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுபற்றி போலீசார் கூறியதாவது:
திருப்பூர் முனிசிபல் சேர்மன் செல்வராஜூம், அவரோடு சென்ற சிலரும் வியாழக்கிழமை திருப்பூரிலிருக்கும், திருப்பூர் இல்லம் என்ற பொதுப் பணித்துறைவிருந்தினர் மாளிகைக்குச் சென்று 50 நாட்கள் தங்குவதற்கு அறை பதிவு செய்ய வேண்டுமென கேட்டனர். அப்போது செல்வராஜ் குடிபோதையில் இருந்தார்.
ஆனால் அது போல் வெகுநாட்கள் தங்குவதற்கு அறை தரமுடியாது என
சப்- டிவிஷனல் என்ஜினியர் கண்ணாம்பாள் மறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுத்தது.
இந்நிலையில் செல்வராஜ் அங்கிருந்த ஜூனியர் என்ஜினியர் முத்துசாமியையும், பொதுப்பணித்துறை அலுவலக ஓட்டுனர் பழனிசாமியையும் தாக்கினார். இதைத்தொடர்ந்து கண்ணாம்பாள் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.
இதையடுத்துகோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் இருக்கும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் இந்த சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்தப் போவதாகஎச்சிரித்துள்ளனர்.
யு.என்.ஐ.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications